ஜெய்சங்கரின் குணத்திற்கு அடிமையான 5 நடிகர்கள்.. ஜென்டில்மேனாக வாழ்ந்து சாதித்த கௌபாய் கிங்

அந்தக் கால சினிமாவில் சிவாஜி, எம்ஜிஆருக்கு நிகராக ஏராளமான ரசிகர்களை கொண்டவர் நடிகர் ஜெய்சங்கர். இவர் பல திரைப்படங்களில் சிஐடி ஆபிஸர், கௌபாய் உள்ளிட்ட கேரக்டர்களில் நடித்திருக்கிறார். அதனாலேயே இவரை பலரும் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட், கௌபாய் கிங் என்று அழைத்தனர்.

திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த இவர் நிஜ வாழ்விலும் ஹீரோவாகவே வாழ்ந்து காட்டினார். அதனால் இவரை சக நடிகர்கள் பலருக்கும் மிகவும் பிடிக்குமாம். அதிலும் படப்பிடிப்பு தளத்தில் இவர் பெரிய நடிகர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் இயல்பாக பழகுவாராம்.

இதன் காரணமாகவே இவரின் மீது பலருக்கும் மிகுந்த அன்பும், மரியாதையும் இருந்தது. அந்த வகையில் இவரின் மீது தீராத அன்பு கொண்டு அவருடைய ரசிகர்களாகவே மாறிய ஐந்து நடிகர்களை பற்றி இங்கு காண்போம்.

Also read: தமிழ் சினிமாவை ஆட்சி செய்யும் 6 வாரிசு நடிகைகள்.. முதல் படத்திலேயே பல வித்தை காட்டிய அதிதி ஷங்கர்

சத்யராஜ் இவர் ஜெய்சங்கருடன் இணைந்து சாவி, உங்க வீட்டு பிள்ளை போன்ற பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். அதன் அடிப்படையில் சத்யராஜுக்கு ஜெய்சங்கர் மீது ஒரு தனி அன்பு உண்டு. இப்போதும் கூட அவர் ஜெய்சங்கர் குடும்பத்தினருடன் நட்புறவோடு தான் இருந்து வருகிறார்.

மம்முட்டி மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் இவர் தமிழிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் ஜெய்சங்கர் உடன் இணைந்து தளபதி, மௌனம் சம்மதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதனால் இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருந்தது.

Also read : கிடைத்த வெற்றியை காப்பாற்ற போராடும் 6 ஹீரோக்கள்.. நாசுக்காக ரூட்டை மாற்றிய வினய்

சித்ரா லட்சுமணன் பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் போன்ற பன்முக திறமை கொண்டவர். பல வருடங்களாகவே இவருக்கு நடிகர் ஜெய்சங்கரின் மீது அளவு கடந்த மரியாதையும், அன்பும் இருக்கிறது. அந்த வகையில் இவர் சிவாஜி, அம்பிகா நடிப்பில் உருவான வாழ்க்கை திரைப்படத்தை தயாரித்திருந்தார். அதில் நடிகர் ஜெய்சங்கரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எம் என் நம்பியார் பல திரைப்படங்களில் ஜெய்சங்கர் உடன் இவர் ஒன்றாக இணைந்து நடித்திருக்கிறார். திரையில் எதிரிகளாக இவர்கள் நடித்திருந்தாலும் நிஜ வாழ்வில் நல்ல நண்பர்களாகவே பழகி வந்தனர். அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் நீண்ட காலமாகவே நல்ல நட்பு இருந்தது.

சிவகுமார் இவர் ஜெய்சங்கர் உடன் இணைந்து இன்று நீ நாளை நான் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் அவர் ஜெய்சங்கரை தன் உடன் பிறந்த சகோதரர் ஸ்தானத்தில் தான் வைத்திருந்தார். அந்த வகையில் சிவகுமார் ஜெய்சங்கரின் தீவிர ரசிகராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also read : கார்த்தி களம் கண்ட 5 கிராமத்து கதைகள்.. பாக்ஸ் ஆபிஸை திணறடித்த இரண்டு வெற்றி படங்கள்

Next Story

- Advertisement -