தமிழ் சினிமாவை ஆட்சி செய்யும் 6 வாரிசு நடிகைகள்.. முதல் படத்திலேயே பல வித்தை காட்டிய அதிதி ஷங்கர்

சினிமாவில் வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் தற்போது அதிகமாகி உள்ளது. ஏனென்றால் சிறு வயது முதலே அவர்களது பெற்றோர் சினிமா துறையில் இருப்பதால் அதை பார்த்தே வளர்ந்ததால் அந்த நடிகைகளுக்கும் சினிமா மீது ஈடுபாடு வந்துள்ளது. அவ்வாறு தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறக்கும் 6 வாரிசு நடிகைகளை தற்போது பார்க்கலாம்.

வரலட்சுமி சரத்குமார் : சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் வாரிசாக சினிமாவில் நுழைந்தவர் வரலட்சுமி சரத்குமார். இவர் சிம்புவுடன் இணைந்து போடாபோடி படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து தாரை தப்பட்டை, சர்க்கார் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். மேலும் கடைசியாக பார்த்திபன் நடிப்பில் வெளியான இரவின் நிழல் படத்தில் வரலட்சுமி நடித்திருந்தார்.

ஸ்ருதிஹாசன் கமலஹாசன் : உலக நாயகன் கமலஹாசனின் இரண்டு மகள்களும் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். இதில் மூத்த வாரிசான ஸ்ருதிஹாசன் பாடகர், இசையமைப்பாளர், நடிகை என பன்முகத்தன்மை கொண்டுள்ளார். ஆனால் தனது தந்தை போல் இவரால் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

ஐஸ்வர்யா அர்ஜுன் : ஆக்சன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் பட்டத்து யானை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்பு ஒரு சில தமிழ் படங்களில் நடித்த ஐஸ்வர்யாவுக்கு எந்த படமும் வெற்றியைத் தரவில்லை. இதனால் தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தன்யா ரவிச்சந்திரன் : தன்யா நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். தாத்தாவின் வேலையை பார்த்து நடிப்புத்துறையில் இவருக்கும் ஆர்வம் வந்துள்ளது. இவர் பலே வெள்ளையத்தேவா, கருப்பன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

கீர்த்தி சுரேஷ் : கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் மலையாள திரைப்பட தயாரிப்பாளர். அவரது அம்மா மேனகா நடிகை ஆவார். இவ்வாறு திரைத் துறையைச் சார்ந்த குடும்பம் என்பதால் கீர்த்தி சுரேஷும் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார்.

அதிதி ஷங்கர் : பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பாடகியாகவும் வலம் வருகிறார். இதையடுத்து தற்போது இரண்டு மூன்று படங்களிலும் அதிதி ஷங்கர் கமிட்டாகியுள்ளார்.