சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ஈஸியா ஏமாற்றப்படும் வெகுளித்தனமான 4 நடிகர்கள்.. உண்மையில் குழந்தை மனசு படைத்த மன்சூர்

Mansoor Alikhan: பொதுவாக ஒருவருடைய வெளித்தோற்றத்தை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர் என்பதை முக்கால்வாசி கணித்து விடுவோம். அப்படித்தான் சினிமாவில் சில நடிகர்களின் வில்லத்தனமான நடிப்பை பார்த்து இப்படி கொடூர கேரக்டராக இருக்கிறார்களே என்று நம்முடைய ஆழ் மனதில் அவர்களுக்கான ஒரு பிம்பத்தை பதித்து விட்டோம்.

அப்படி வில்லன் கேரக்டரில் நடித்த நான்கு நடிகர்களின் உண்மையான குணம் அந்த மாதிரியே கிடையாது. ரொம்பவே குழந்தை மனசு படைத்த கேரக்டரில் தான் அவர்கள் இருக்கிறார்கள். அந்த நடிகர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். அதில் முதலில் பார்க்கப் போவது சரத்குமார். இவர் என்னதான் ஹீரோவாக பல படங்களில் நடித்தாலும் வில்லன் கேரக்டரிலும் மிகக் கொடுமையாக நடித்திருக்கிறார்.

Also read: மார்க் ஆண்டனி வெற்றியை முழுசா கொண்டாட முடியாமல் தவிக்கும் விஷால்.. சுற்றி அடிக்கும் ஏழரை நாட்டு சனி

அப்படிப்பட்ட இவருடைய உண்மையான கேரக்டர் ஈசியாக எல்லாரையும் நம்பி விடுவது. அதனால் இவருடன் இருந்த பலரும் இவரை ஏமாற்றி இருக்கிறார்கள். பேச்சில் கம்பீரமான குரலும், கட்டுமஸ்தான உடம்பும் இருக்கிறது. மற்றபடி இவருடைய மனசு பச்சக் குழந்தை போல் தான் இருக்குமாம். அடுத்தபடியாக தற்போது சர்ச்சையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் விஷால்.

இவர் பேசுவது தான் அதிக பிரசிங்கித்தனமாக இருக்கும். மற்றபடி இவரால் முடிந்தவரை மற்றவர்களுக்கு நல்லது தான் செய்வார். அத்துடன் ஏதாவது ஒரு விஷயம் இவருடைய மனதிற்கு பாதிப்பை உண்டாக்கினால் உடனே சின்ன குழந்தை போல் அழுது விடுவாராம்.

Also read: அப்பாவை சந்தித்த போது விஜய் போட்ட முக்கிய கட்டளை.. உங்க சங்கார்த்தமே வேண்டாம் என எஸ்ஏசி எடுத்த முடிவு

அடுத்ததாக எஸ்ஏ சந்திரசேகர், இவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பலருக்கும் நிறைய உதவிகளை செய்து அவர்களின் வாழ்க்கைக்கு மிகப்பெரிய வெளிச்சத்தை கொடுத்திருக்கிறார். இதற்கு உதாரணம் விஜய் ஆண்டனியை சொல்லலாம். அதாவது விஜய் ஆண்டனி கஷ்டப்படும் காலத்தில் அவருக்கு இருக்கும் இடம் மற்றும் வேண்டுகிற வசதி எல்லாம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

இதற்கு அடுத்தபடியாக முரட்டு வில்லனாக அனைவரையும் மிரட்டிய மன்சூர் அலிகான். இவர் பேச்சில் தான் அடாவடித்தனம் இருக்கும். ஆனால் அனைவரும் இவரை ஈசியாக ஏமாற்றி விடுவார்கள். உதாரணத்திற்கு படங்களில் இவரை நடிக்க வைப்பதற்காக 4 லட்சம் தரேன் என்று கூப்பிட்டு நடிக்க வைத்த பின்பு வெறும் ஐம்பதாயிரம் மட்டும் கொடுத்து விடுவார்களாம். இவரும் அதற்கு எந்த கேள்வியும் கேட்காமல் அந்த சம்பளத்தை அப்படியே வாங்கிக் கொள்வாராம். இப்படி இந்த நான்கு வில்லன்களும் குழந்தை மனசு போல தான் இருந்து வருகிறார்கள்.

Also read: மாஸ்டர் படத்திலிருந்து விஜய்க்கு வந்த புதுப்பழக்கம் .. மன்சூர் அலிகான் கூட இருந்தால் கேட்கவா வேணும்

- Advertisement -

Trending News