சென்சார் செய்யப்பட்டு வெளிவராத 300 படங்கள்.. அகம்பாவத்தில் அழிந்த ஜெய்

எப்படியாவது சினிமாவில் சாதித்து பெரிய ஆளாகி தனது குடும்பத்தை காப்பாற்றி விடவேண்டும் என்ற கனவோடு பலரும் சினிமாத் துறைக்குள் காலடி வைக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவருக்கும் சினிமாவில் வெற்றி என்பது அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது.

இப்படி எண்ணற்ற ஆசைகளோடு வந்த பல உழைப்பாளிகளும் தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் அணைந்து போன கதைகள் ஏராளம் உண்டு. சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கையும் தாண்டி பல பேருக்கு சோறு போடக் கூடிய ஒரு தொழிலாக இருக்கிறது.

படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசையில் சினிமாவுக்குள் வந்து பல நஷ்டங்களை சந்தித்து தெருவுக்கு வந்த பல தயாரிப்பாளர்களும் உண்டு. அதேபோல ஒரு நடிகராக, இயக்குனராக எப்படியாவது முன்னேற வேண்டும் என்று துடித்த பலருக்கும் தமிழ் சினிமா தனது கோர முகத்தைக் காட்டி இருக்கிறது.

இப்படி தமிழ் சினிமாவால் அழிந்துபோன பலரின் கதைகளை கேட்டாலே நமக்கு கண்ணீர் வரும். அப்படி பல கனவுகளை மனதில் சுமந்துகொண்டு தான் பல இயக்குனர்களும் படத்தை இயக்குகிறார்கள். ஆனால் அவையெல்லாம் மக்களை சென்றடைவதில்லை.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் சென்சார் செய்யப்பட்டு ரிலீசாகாமல் கிடப்பில் கிடைக்கிறதாம். அதில் ஜெய் நடித்த நான்கைந்து படங்களும் அடக்கம். ஜெய் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் அவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் அவரை வைத்து படத்தை தயாரித்து, இயக்கியிருக்கிறார்.

அர்ஜூனின் காதலி என்று பெயரிடப்பட்ட அந்த படத்தின் சூட்டிங் குற்றாலத்தில் நடைபெற்றது. அந்த சமயத்தில் ஜெய் அந்த படத்திற்கு நிறைய இடையூறுகளை செய்து படத்தை நிறுத்தி விட்டார் என்று படத்தின் இயக்குனர் தற்போது புலம்பி வருகிறார்.

இது ஒரு உதாரண சம்பவம்தான். இது போன்ற காரணத்தால் எத்தனையோ படங்கள் திரைக்கு வர முடியாமல் இருக்கிறது. இதனால் பாதிக்கப்படப்போவது சம்பந்தப்பட்ட நடிகர்கள் கிடையாது. அவர்களுக்கு இந்தப் படம் இல்லை என்றால் இன்னொரு படம் என்று போய் விடுவார்கள்.

ஆனால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரோ, இயக்குனரோ இதில் இருந்து மீள முடியாமல் தங்கள் கனவுகளை தொலைத்து விட்டு நிற்கின்றனர். இது போன்ற ஒரு அவல நிலைதான் தற்போதைய தமிழ் சினிமாவில் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்