விஜயகாந்த்க்கு டி-ராஜேந்திரர் இசையமைத்த 3 படங்கள்.. ஏ ஆர் ரகுமானினை மெய்சிலிர்க்க வைத்த மெலடி

3 films composed by T Rajendar  for Vijayakanth:வாடா என் மச்சி, வாழைக்காய் பஜ்ஜி” என எதுகை மோனையுடன் வார்த்தைகளால் விளையாடுபவர் டி ராஜேந்தர். தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், கவிஞர்,தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கும் டி ராஜேந்திரரின் சிறப்பு என்னவென்றால் மடைதிறந்த வெள்ளம் போல் அவர் பேசும் பேச்சு. விஜயகாந்தின் மீது அலாதி பிரியம் கொண்ட டி ராஜேந்தர் அவருக்கு இசையமைத்த மூன்று படங்கள் இதோ,

எங்கள் குரல்: எந்த ஒரு முன்னேற்பாடும் செய்யாது ஆன் த ஸ்பாட்டிலேயே, இசையுடன் பாட்டுக்கு மெட்டு! மெட்டுக்கு வரி என வித்தை செய்யும் ராஜேந்தர் அவர்கள் விஜயகாந்த் கௌரவ தோற்றத்தில் வந்து அர்ஜுன் நளினி சுரேஷ் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்த எங்கள் குரல் திரைப்படத்தில் 6 ஹிட் பாடல்களை கொடுத்திருந்தார்.

சட்டம் சிரிக்கிறது: விஜயகாந்தின் 17 வது படமாக1982 வெளிவந்த சட்டம் சிரிக்கிறது திரைப்படத்தில் முதன் முதலாக டி ராஜேந்தர் இசையமைப்பாளராக விஜயகாந்த் உடன் இணைந்தார். விஜயகாந்த், ஜோதி, பிரதாப் போத்தன், மனோரமா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

Also read: விஜயகாந்துக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த சில்வர் ஜூப்ளி ஹீரோ.. ஒரே நாளில் முட்டி மோதிய படங்கள்

கூலிக்காரன்: விஜயகாந்த்க்கு ரொம்ப ஸ்பெஷலா அமைந்தது 1987 ல் வெளிவந்த கூலிக்காரன் திரைப்படம். இப்படத்தில் இடம்பெற்ற குத்து விளக்காக, குலமகளாக பாடல் இன்றும் கிராமத்து கல்யாண விருந்திலும், இசைகச்சேரிகளிலும் தவறாது இசைக்கப்படும் பாடல் ஆகும். டி ராஜேந்திரரின் இசை மற்றும் பாடல்கள் கூடுதல் பலமாக அமைந்து  விஜயகாந்தின் கூலிக்காரனை மாபெரும் வெற்றி பெற செய்தது.

பாடல்களுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கும் போது உணர்ச்சியுடன் ஆடிக்கொண்டே சொல்லிக் கொடுப்பாராம் டி ராஜேந்தர். பத்துதல பாடல் வெளியீட்டின் போது ஏ ஆர் ரகுமான், இவரைப் பற்றி பேசும்போது டி ராஜேந்தர் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் எனவும் அவரது இசையில் வெளிவந்த மெலடி பாடல்களில், தான் மெய்சிலிர்த்து போனதாகவும் கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான்.

Also read: டி ராஜேந்தர் படத்தில் நடிக்க அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகை.. சுயரூபம் தெரிந்து விரட்டி விட்ட மனுஷன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்