வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

போட்டி போட்டு பட்ஜெட் போடும் 2 பிரம்மாண்ட படங்கள்.. கமலால் பிச்சிக்கிட்டு போன வியாபாரம்

High Budget Movies: இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு இரண்டு பிரம்மாண்ட படங்கள் உருவாக்கி வருகிறது. இந்த அளவிற்கு பட்ஜெட் இதுதான் முதல் தடவை. அதுவும் கமல் அந்த படத்தில் சேர்ந்ததால் படத்தின் பிசினஸும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

அந்தப் படங்களில் ஒன்று ப்ராஜெக்ட் கே. இந்தப் படம் மிக பிரம்மாண்டமாக 600 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் வில்லனாக உலகநாயகன் கமலஹாசன் நடித்து வருகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இணையத்தை கதி கலங்க செய்தது. 2020 ஆம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் துவங்கப்பட்ட இந்த படத்தை வைஜயந்தி மூவிஸின் 50வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு வெளியானது.

Also Read: பைத்தியக்காரராக நடித்து வெற்றி பெற வைத்த 6 படங்கள்.. விக்ரமுக்கு திருப்புமுனையாக அமைந்த படம்

இதில் பிரபாஸுடன் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல் உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்கிறார். நாக் அஸ்வின் படத்தை இயக்குகிறார். அது மட்டுமல்ல ப்ராஜெக்ட் கே படத்திற்காக பிரபாஸ் 150 கோடி சம்பளம் வாங்குகிறார். அதனாலேயே இதன் பட்ஜெட்டும் 600 கோடிக்கு எகிறி இருக்கிறது.

இரண்டாவது பெரிய பட்ஜெட் படம் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம். இந்தப் படம் 500 கோடி பட்ஜெட்டில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இது தமிழ் படமாகவும் வருவது நமக்கு பெருமை தான். ஒரு நாளைக்கு இந்த இரண்டு படத்தின் சூட்டிங் செலவு மட்டும் ஒரு கோடியை தாண்டுகிறதாம்.

Also Read: பிக் பாஸ் சீசன் 7 எப்போது தெரியுமா.? 50 கோடி சம்பளத்தை உயர்த்திய விஜய் டிவி

மேலும் புஷ்பா 2 படத்தின் ஒரே ஒரு சண்டைக் காட்சிக்கு மட்டும் ஒரு நாளைக்கு 80 லட்சம் செலவாகிறது. அந்த அளவிற்கு ஒவ்வொரு காட்சியையும் மிகப் பிரமாண்டமாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர், அதனாலேயே இந்த படத்தின் பட்ஜெட் 500 கோடியை தொட்டிருக்கிறது.

இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்தது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இவ்வாறு இந்த இரண்டு படங்களுக்கு தான் படத்தை வாரி இறைத்து, போட்டி போட்டுக் கொண்டு தயார் செய்கின்றனர். அதற்கு ஏற்றார் போல் இந்த படங்களின் ப்ரீ பிசினஸும் பிச்சுக்கிட்டு போகிறது.

Also Read: கமல் சூதானமாய் வேண்டாம் என தூக்கி எறிந்த 5 இயக்குனர்கள்.. அஜித் பிரண்டுக்கு இப்படி ஒரு நிலைமையா

- Advertisement -

Trending News