பைத்தியக்காரராக நடித்து வெற்றி பெற வைத்த 6 படங்கள்.. விக்ரமுக்கு திருப்புமுனையாக அமைந்த படம்

Lunatic Movie Actors: சினிமாவில் முக்கால்வாசி படம் காதலை மையமாக வைத்து தான் படங்கள் வெளிவந்திருக்கும். சில நேரங்களில் அந்த காதல் கை கூடாததால் அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் பைத்தியக்காரர்கள் போல் மாறிவிடுவார்கள். அப்படி பைத்தியக்காரராக நடித்து வெற்றி பெற்ற படங்களை பற்றி பார்க்கலாம்.

பருத்திவீரன்: அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் பருத்திவீரன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதை ஆனது கார்த்தி எதை பத்தியும் கவலைப்படாமல் சண்டித்தனம் செய்து கொண்டிருப்பவராகவும், இவரை காதலித்து கல்யாணம் பண்ண வேண்டும் என்று பிரியாமணி முடிவுடன் இருப்பார். பிறகு கார்த்திக், பிரியாமணியின் காதலை புரிந்து கொண்டு ஒன்று சேரலாம் என்று நினைக்கும் போது சில சூழ்ச்சியால் பிரியாமணி மோசமான நிலைக்கு போய் விடுகிறார். இதனால் இவரை நினைத்துக் கொண்டு கார்த்தி பைத்தியக்காரர் போல மாறிவிடுவார்.

Also read: வந்தியதேவனை வைத்து வளர்ந்த 5 இயக்குனர்கள்.. கார்த்திக்கு பிறகு தளபதி வாய்ப்பை பெற்ற 2 டைரக்டர்கள்

காதல்: இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு காதல் திரைப்படம் வெளிவந்தது. இதில் பரத், சந்தியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் பள்ளி பருவத்தின் போது ஏற்பட்ட காதலால் வரக்கூடிய பிரச்சனைகளை சந்திக்கும் விதமாக அமைந்திருக்கும். இதில் சந்தியா,பரத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழலாம் என்று திருமணம் செய்து கொள்வார். ஆனால் குடும்பத்தில் உள்ளவர்கள் சந்தியாவை பிரித்துக் கொண்டு வேறொரு கல்யாணத்தை பண்ணி வைத்து விடுவார்கள். இதனால் பரத் கடைசியில் பைத்தியமாக ரோட்டில் திரிவார்.

சேது: இயக்குனர் பாலா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் சேது திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விக்ரம் அளவுக்கு அதிகமாக காதலை வைத்துக்கொண்டு காதலியுடன் சேரலாம் என்ற சந்தோஷத்தில் இருக்கும் பொழுது அவருக்கு ஏற்பட்ட சில விபத்தால் பைத்தியக்காரராக மாறிவிடுவார். இப்படம் துவண்டு போய் இருந்த விக்ரமுக்கு சினிமாவில் திருப்புமுனையாக அமைந்தது.

Also read: விக்ரம் படத்தின் இரண்டு முக்கிய கேரக்டர்களை லியோவில் இறக்கும் லோகேஷ்.. அப்போ LCU கன்பார்ம்

3: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு 3 படம் வெளிவந்தது. இதில் தனுஷ் மற்றும் சுருதிஹாசன் ஒருவரை ஒருவர் மனதார காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள். அதன்பின் தனுசுக்கு ஒரு நோய் இருப்பதை தெரிந்து கொண்ட பின்பு ரொம்பவே வித்தியாசமாக மாறி பித்து பிடித்தது போல் ஆகிவிடுவார்.

7ஜி ரெயின்போ காலனி: செல்வ ராகவன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் வெளிவந்தது. இதில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது ஒரு பையனுக்கு ஒரு பெண்ணின் மீது ஏற்படும் தீராத காதலை சொல்லும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும். பிறகு அந்த காதல் கை கூடாததால் என்ன செய்வது என்று தெரியாமல் மனநிலை பாதிக்கப்படுவது போல் ஆகிவிடுவார்.

மூன்றாம் பிறை: பாலு மகேந்திரா இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு மூன்றாம் பிறை திரைப்படம் வெளிவந்து. இதில் கமலஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை ஆனது மறதியால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதேவிக்கு அடைக்கலம் கொடுத்து அவருக்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாக அமைந்திருக்கும். கடைசியில் சுயநினைவு வந்த பிறகு கமலை அடையாளம் கொள்ளாததால் ஸ்ரீதேவி போல் பைத்தியக்காரராக நடித்துக் காட்டி இருப்பார்.

Also read: மாமன்னன் படம் எப்படி இருக்கு.? முதல் விமர்சனத்தை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்திய தனுஷ்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்