சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பிக் பாஸ் சீசன் 7 எப்போது தெரியுமா.? 50 கோடி சம்பளத்தை உயர்த்திய விஜய் டிவி

Big Boss Season 7: சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரைட் என்டர்டைன்மென்ட் ஷோ என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இதுவரை 6 சீசன்களை விஜய் டிவி வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்து, இப்போது ஏழாவது சீசனை துவங்க தயாராகி விட்டனர். சீசன் 7 எப்போது துவங்கப் போகிறது என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி பிக் பாஸ் ரசிகர்களை குதூகலப்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அப்படி என்ன ஸ்பெஷல் என்றால், அது கமலஹாசன் தொகுத்து வழங்குவதால் தான். என்னதான் அவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு படத்தை மிஞ்சிய சம்பளம் வருவதாலும், அவருடைய அரசியல் பயணத்திற்கு ஆதாயமாகவும் பிக் பாஸ் மேடையை பயன்படுத்தி கொள்வதாலும் இந்த நிகழ்ச்சி கமலுக்கும் கொஞ்சம் ஸ்பெஷல் தான்.

Also Read: அர்த்த ராத்திரியில் ரட்சிதா கணவன் செய்த மட்டமான வேலை.. போலீஸிடம் அளித்த பரபரப்பான புகார்

அது மட்டுமல்ல கடந்த 6 சீசன்களின் டிஆர்பி ரேட்டிங் தாறுமாறாக எகிறியதால், 7-வது சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்க வேண்டும் என, விஜய் டிவி அவருடைய சம்பளத்தில் மேலும் 50 கோடியை உயர்த்திக் கொடுத்திருக்கிறது. கடந்த ஆறாவது சீசனில் 80 கோடி சம்பளம் வாங்கிய கமல், இப்போது ஏழாவது சீசனுக்கு 130 கோடியை சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் மாதம் பிக் பாஸ் சீசன் 7 துவங்கப் போவதாகவும் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோவிற்கான சூட் இன்னும் சில தினங்களில் துவங்க திட்டமிட்டுள்ளனர். சீசன் 7 மற்ற சீசன்களை காட்டிலும் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கப்போகிறது. முன்பு பிக் பாஸ் வீட்டில் 65 கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில், 7-வது சீசனில் 76 கேமராக்கள் பொருத்தப்பட்டு நிகழ்ச்சியில் கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்தப் போகின்றனர்.

Also Read: உயிரே போனாலும் கண்டுக்காத வடிவேலு.. நடிகருக்காக ஓடோடி வந்த விஜய் டிவி KPY பாலா

இந்த சீசனில் பயில்வான் ரங்கநாதன் உடன் ரகளையில் ஈடுபட்ட நடிகை ரேகா நாயர் முதல் போட்டியாளராக களம் இறங்கப் போகிறார். அதன் தொடர்ச்சியாக விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற சரத் பிக் பாஸ் 7-ல் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார். இவர் போன சீசனின் டைட்டில் வின்னர் ராஜுவின் இடத்தை நிரப்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களது வரிசையில் நடிகை உமா ரியாஸ் மற்றும் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களான பாவனா மற்றும் மாகாபா இருவருள் ஒருவர் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. போன சீசனில் பிரியங்கா கலந்துகொண்டு நிகழ்ச்சியில் செம ரகளை செய்தார். அதேபோல இந்த முறை மாகாபா வந்தால் நன்றாக இருக்கும் என்றும் ரசிகர்கள் விரும்புகின்றனர். எனவே வரும் ஆகஸ்ட் மாதம் பிக் பாஸ் சீசன் 7 துவங்கப் போகிறது என்ற தகவலை அறிந்ததும் சின்னத்திரை ரசிகர்கள் குஷி ஆகிவிட்டனர்.

Also Read: எதிர்க்க திராணி இல்ல, 18 மணி நேரம் சித்திரவதை அனுபவித்த செந்தில் பாலாஜி.. குமுறிய விஜய் டிவி பிரபலம்

- Advertisement -

Trending News