கமல் சூதானமாய் வேண்டாம் என தூக்கி எறிந்த 5 இயக்குனர்கள்.. அஜித் பிரண்டுக்கு இப்படி ஒரு நிலைமையா

Actor Kamal: நடிப்பு, கதை, திரைக்கதை, வசனம், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தவர் கமல். தமிழ் திரைப்பட உலகத்தை மிகவும் ஆழமாக கற்றுக் கொண்டவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவரின் நடிப்பில் தான் இயக்க வேண்டும் என்ற ஏக்கம் பல இயக்குனர்களுக்கு இருக்கின்றது. அப்படிப்பட்ட மாஸ் ஹீரோவான கமல் சில காரணங்களினால் சில இயக்குனர்களிடம் படங்கள் நடிக்க நோ சொல்லி இருக்கிறார். அப்படி ஓகே ஆகாத 5 இயக்குனர்கள் பற்றிப் பார்ப்போம்.

மிஷ்கின்: தமிழில் பல வித்தியாசமான திரில்லர் படங்களை இயக்கியவர் மிஷ்கின். தனது புதிய படத்திற்காக கமலிடம் கதை சொன்னார் மிஷ்கின். கதையை கேட்ட கமல் இது அந்த ஆங்கில படத்தில் வந்தது, இது அந்த ஜப்பான் படத்தில் வந்தது, இது அந்த நாவலில் ஏற்கனவே வந்துவிட்டது என்று கூறியுள்ளார். கமலிடம் மாட்டிக் கொண்ட மிஸ்கின் இவரிடம் கதை சொல்வது கஷ்டமடா சாமி என்று நினைத்து பிறகு சந்திக்கலாம் என ஓடி வந்து விட்டார். கமலிடம் கதை சொல்லப் போனால் அது புதிய கதையாக இயக்குனர் தானே யோசித்த சிறந்த கதையாக இருக்க வேண்டும். பல சீன மட்டும் ஜப்பான் கதைகளை சுட்டு படம் எடுப்பவர் மிஷ்கின். இவரின் பருப்பு கமலிடம் வேக வில்லை.

Also Read: கிராமத்து மனம் மாறாமல் முத்தையா எடுத்த 5 படங்கள்.. சரக்கு குறைந்ததால் தியேட்டரில் ஈ ஓட்டும் காதர் பாட்ஷா

முத்தையா: கிராமப்புற பின்னணியில் வைத்து படங்கள் செய்து வெற்றி கண்டவர் இயக்குனர் முத்தையா. அவர் படங்களில் சாதிய கருத்துக்கள் இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டு இருந்தாலும் அவர் படங்கள் மக்களிடையே வரவேற்பையும் பெறத்தான் செய்கின்றன. கமலுக்கு ஒரு கதையை தயார் செய்த முத்தையா அவரிடம் கேட்க கமலுக்கும் கதை பிடிக்கவே செய்தது. ஆனால் ஒரு சில இடங்களில் கமல் தன் வயதுக்கு ஏற்றார் போல் படக்கதை இருக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

அதனால் அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளாத கமல், தயாரித்து கொடுக்க சம்மதம் தெரிவித்தார். அப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஆர்யாவிற்கு போக தனக்கு ஏற்ற சம்பளம் ராஜ்கமல் நிறுவனத்தால் கொடுக்க இயலாது என்று படத்தை வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு மாற்றும்படி முத்தையாவிடம் கேட்டுக் கொண்டார் ஆர்யா. காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்று வெளிவந்து ஊத்திக்கொண்டது அப்படம். பெறும் நஷ்டத்தில் இருந்து தன் தலை தப்பியது கமலுக்கு.

Also Read: மொக்க படத்தின் 2ம் பாகத்திற்கு சண்டை போடும் லிங்குசாமி.. ஆர்யா வேண்டாம் அந்த ஹீரோ தான் வேணுமாம்

பாலா: இயக்குனர் பாலா, வேலா ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை நாவலை படமாக இயக்க முடிவெடுத்து அதற்கான முயற்சிகள் செய்தார். கமலஹாசனை நடிக்க வைக்க முடிவெடுத்த அவர், தனக்கு இக்கதையை சொல்லி விளக்க தெரியாது, என்று வேலா மூர்த்தியை அனுப்பி இருக்கிறார். கமல் கதை நன்றாக இருக்கிறது என்று ஓகே சொல்லி இருக்கிறார். ஆனால் அதற்குப் பிறகு பாலா இந்த படத்தை இயக்க தாமதம் ஆக்கிக் கொண்டே இருந்திருக்கிறார். பிறகு வேறு ஒரு படத்தை இயக்க சென்று விட்டார். கமலை வைத்து படம் எடுத்தால் அவர் எல்லா விஷயங்களிலும் தலையிடுவார் என்பதால் தன்னால் அந்த படத்தை தன் பாணியில் எடுக்க முடியாது என்று நினைத்த பாலா தலை தெறிக்க ஓடி விட்டார்.

லிங்குசாமி: திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனமான லிங்குசாமி தயாரிப்பில் வெளியான படம் உத்தம வில்லன். படங்களில் பல வித்தியாசமான முயற்சிகளை கையில் எடுக்கும் கமல் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் பலரும் நடித்த இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் லிங்குசாமி மீண்டும் கமலுக்காக ஒரு கதை எழுதி வைத்திருக்கிறார். கண்டிப்பாக கமல் அதில் நடிப்பார் என்று நம்பி இருக்கிறார். அடுத்த ஆண்டு தேர்தல் வரவிருப்பதால் அதற்கு முன்பாகவே தான் கமிட்டான எல்லா படங்களிலும் நடித்து முடிக்க கமல் முடிவு செய்துள்ளார். மற்ற படங்களில் நடிப்பதில் ஆர்வமாக உள்ளார் கமல். திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் நடிப்பாரா என்ற கேள்விக்கு ஆண்டவனான ஆண்டவருக்கே வெளிச்சம்.

Also Read: ஏ ஆர் முருகதாஸ் பெருமை பட்ட சம்பவம்.. விஜய் பட வெற்றிக்கு ட்ரீட் கொடுத்த எஸ் ஜே சூர்யா

ஏ. ஆர். முருகதாஸ்: மாஸ் ஹீரோக்களை வைத்து படம் எடுப்பதில் கைத்தேர்ந்தவர் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ். தற்போது 1947 ஆகஸ்ட் 16 படத்தை தயாரித்து வருகிறார். மாஸ் ஹீரோவான கமல் குறித்து பேசியஅவர், கமலை இயக்குகின்ற இயக்குனர்களின் படங்களை எடுத்துப் பார்த்தால் அது தான் அவர்களது கேரியரில் தி பெஸ்ட் படமாக இருக்கும். இயக்குனர் மணிரத்தினத்திற்கு கூட அப்படித்தான்.

அவருடன் இணைந்து படங்கள் செய்வது, பத்தோடு பதினொன்றாக இருக்கக் கூடாது என்றும் அந்த பயத்துல தான் நான் இன்னும் அவர் கூட படம் பண்ணல என்றும் கூறுகிறார் முருகதாஸ். ரஜினி நடிப்பில் இவர் உருவாக்கிய தர்பார் படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறாததால், கழுவுற மீனுல நழுவுற மீனாக நழுவி விட்டார் முருகதாஸ்.

- Advertisement -