முதன் முதலில் வெளியான பான் இந்திய திரைப்படம்.. அதுவும் நம்ம தமிழர் படைத்த சாதனை

ஹிந்தி பட மார்க்கெட்டை தற்போது தென்னிந்திய படங்களில் அடித்து துவம்சம் செய்து வருகின்றன. 2015ஆம் ஆண்டு ராஜமௌலியின் பாகுபலியை கண்ட பிரமித்த இந்தியா, அதன் இரண்டாம் பாகம் வெளியான பின் இந்தியாவில் வெளியான திரைப்படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என சாதனை படைத்து தற்போது வரை முதலிடத்தில் உள்ளது. பின்னர் அண்மையில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படமும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து ஹிந்தி திரையுலகை திக்கு முக்காட வைத்துள்ளது.

ராஜமௌலி மட்டும் தான் இதனை செய்தார் என்பதால் முதல் பான் இந்திய படம் கொடுத்தது தெலுங்கு திரையுலகம் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் பான் இந்திய படங்களை கன்னட திரையுலகம் தான். கன்னட திரையுலகில் ஜாம்பவானாக இருக்கும் ரவிச்சந்திரன் இந்த முயற்சியை 1990களிலேயே நிகழ்த்தியுள்ளார். நடிப்பு மட்டுமின்றி இயக்குனராக இருந்த இவர் கடந்த 1991ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் படம் ஒன்றை எழுதி இயக்கி நடித்துள்ளார்.

நாட்டுக்கு ஒரு நல்லவன், சாந்தி கிராந்தி என தமிழ் மற்றும் ஹிந்தியில் ரஜினியும், சாந்தி கிராந்தி என்ற பெயரில் தெலுங்கில் நாகர்ஜுனாவும், கன்னடத்தில் ரவிச்சந்திரனும் நாயகர்களாக நடித்திருந்தனர். ஜுகி சாவ்லா, குஷ்பு, அனந்த நாக் போன்றோர் நான்கு மொழிகளிலும் நடித்திருந்தனர். பெரிதும் இந்த படம் வெற்றி அடையவில்லை.

கன்னட திரையுலகில் ஆரம்ப காலங்களில் ராஜ்குமாருக்கு பிறகு முன்னோடியான பல விஷயங்களை அறிமுக படுத்தியவர் நடிகர் ரவிச்சந்திரன். தமிழில் பொய் முகங்கள், பருவ ராகங்கள் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.கே.ஜி.எஃப் படத்தை தயாரித்த கார்த்திக் கௌடா படத்தின் வெற்றியை கொண்டாடும் போது, முன்னோடியாக இருந்து வழிவகுத்து கொடுத்த தயாரிப்பாளர் வீராசாமியை நினைவுகூர்ந்து இந்த படத்தை குறித்து பகிர்ந்துள்ளார்.

படத்தை தயாரித்த வீராசாமி தான் நடிகர் ரவிச்சந்திரனின் தந்தை. தமிழகத்தை பூர்விகமாக கொண்ட வீராசாமி பழம்பெரும் கன்னட ஜாம்பவான் ராஜ்குமாரின் நெருங்கிய நண்பர். அங்கு பல படங்களை தயாரித்துள்ள இவர் தமிழில் ஒரே ஒரு படம் மட்டுமே தயாரித்துள்ளார். 1985இல் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான படிக்காதவன் படத்தை தயாரித்திருந்தார்.

பெரிதும் பார்க்கப்படாத கன்னட திரையுலகமும் தற்போது பாலிவுட் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே ஆச்சரியப்படுத்தியுள்ளது. கே.ஜி.எஃப் 1னின் அசாத்திய வெற்றிக்கு பிறகு, முதன் முதலில் கன்னட திரையுலகில் இருந்து 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான கே.ஜி.எஃப் 2 வெளியான 4 நாட்களில் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து பான் இந்திய அளவில் மாபெரும் சாதனைகளை செய்து வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்