புது தொழில்நுட்பத்துடன் கெத்து காட்ட வரும் யமஹா RX 100.. விலை எவ்வளவு தெரியுமா.?

Yamaha RX 100: என்னதான் விலை உயர்ந்த ஆடம்பர கார் இருந்தாலும் பைக்கில் செல்வதில் இன்றைய இளைஞர்களுக்கு அலாதி பிரியம் உண்டு. அதிலும் திருமணமான புது ஜோடி, காதல் ஜோடி என பலரும் பைக் ரைடை தான் அதிகம் விரும்புகின்றனர்.

அதனாலேயே இப்போது புதுப்புது மாடல் பைக்குகள் சாலைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் 90 காலகட்டத்தில் இளைஞர்களின் ஃபேவரைட் மற்றும் சாகச பைக்காக இருந்தது யமஹா RX 100 தான்.

அப்போது எங்கு திருந்தினாலும் சாலைகளில் இந்த பைக் தான் கண்ணில் தென்படும். அந்த அளவுக்கு பிரபலமாக இருந்த இந்த பைக் தற்போது மீண்டும் புதுப்பொலிவுடன் வர இருக்கிறது.

புது பொலிவுடன் வரும் யமஹா RX 100

அதன்படி கடந்த 1985 ஆம் ஆண்டு இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு இதன் தயாரிப்புக்கு தடை விதித்த போது பலரும் அதிர்ந்து தான் போனார்கள்.

தற்போது அவர்களை குஷிப்படுத்தும் வகையில் மீண்டும் இந்த பைக் பழைய கெத்தை காட்ட வருகிறது.. அந்த வகையில் புது மாடலில் ஜிபிஎஸ், ப்ளூடூத் இணைப்பு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

அதேபோல் பைக் பஞ்சர் ஆவதை தடுக்க டியூப்லெஸ் டயர் மற்றும் என்ஜின் திறன் 250cc ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பழைய மாடல் என்ஜினை பொருத்தவரையில் 98cc இருந்தது.

மேலும் பல சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் இந்த பைக்கின் வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் விரைவில் அது சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பைக்கின் விலை ஒரு லட்சம் எனவும் கூறப்படுகிறது.

முன்னணி நிறுவனங்களின் வியாபார தந்திரம்

Next Story

- Advertisement -