1000 கோடிக்கு அம்பானி நடத்துன கல்யாணம் வீண் போகல.. இந்தியாவிற்கே பெருமை என சூப்பர் ஸ்டார் சொல்ல காரணம் இதான்

Super Star Rajini: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி– ராதிகா ஜோடியின் திருமணத்திற்கான முந்தைய கொண்டாட்டம் குஜராத் மாநிலத்தில் ஜாம் நகரில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்ததுதான் இப்போது சர்வதேச அளவில் பேசும் பொருளாகி உள்ளது. இதில் இவ்வளவு சுவாரசியங்கள் நிகழ்ந்துள்ளதா! என பலரும் ஆச்சரியப்படுத்தும் அடுத்தடுத்து செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

அதிலும் மூன்று நாட்களாக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சர்வதேச பிரபலங்களும், திரை நட்சத்திரங்களும், விளையாட்டு வீரர்களும் பங்கேற்றனர். இதில் ரஜினி அவருடைய மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார். விழா முடிந்து சென்னை திரும்பும் முன் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‘இந்தியாவிற்கே பெருமிதம்! 1000 கோடிக்கு அம்பானி நடத்தின கல்யாணம் வீண் போகல’ என்று சொன்னதன் காரணம் இப்போது தெரியவந்துள்ளது.

இந்த கல்யாணத்தை ஆயிரம் கோடி செலவில் ‘டாப் மோஸ்ட் ராயல் வெட்டிங்’ என உலகமே சொல்லும் அளவுக்கு நடத்தி விட்டனர். இதற்கு முன்பு சார்லஸ் டயானா மற்றும் லட்சுமி மிட்டல் இவர்கள்தான் இப்படி ஒரு கல்யாணம் பண்ணியவர்கள். மேலும் அம்பானி வீட்டில் திருமண விழாவில் மைக்ரோசாப்ட் நிறுவன பில்கேட்ஸ், மெடா நிறுவனத்தின் தலைவர் மார்க் சூகர்பெர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் என சர்வதேச அளவிலான விவிஐபிகளும் பங்கேற்றனர்.

Also Read: நெட்டிசன்களால் பங்கமாய் கலாய்க்கப்படும் ரஜினி.. அம்பானி வீட்டு விருந்தினால் மதி மயங்கிய சூப்பர் ஸ்டார்

அம்பானி நடத்திய கல்யாணத்தில் இவ்வளவு சுவாரசியங்களா!.

அதோட பாலிவுட் திரை நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என உலகம் முழுவதிலும் இருக்கும் பிரபலமானவர்கள் பலரும் ஜாம் நகரில் குவிந்தனர். இதனால் குஜராத் ஏர்போர்ட்டே திணறியது. அவர்களையெல்லாம் அழைத்து வருவதற்கு என்றே 150 பிளைட் ஏற்பாடு செய்யப்பட்டது. அதுமட்டுமல்ல ஏர்போர்ட்டில் இருந்து அவர்களை ரோல்ஸ் – ராய்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற விலை உயர்ந்த கார்களின் மூலம் விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்தனர்.

அவர்கள் தங்குவதற்கு என்றே 7 ஸ்டார் ரூம் போல் டென்ட் போட்டனர். அவர்கள் எல்லோருக்கும் தனித்தனியே மேக்கப் மென்ஸ் இருந்தார்கள். ஜாம் நகரில் இருக்கும் 21,000 மக்களுக்கு மூன்று நாட்களுக்கு 24 மணி நேரமும் சாப்பாடு, டிபன், ஸ்னாக்ஸ் என இடைவிடாமல் உணவு கொடுக்கப்பட்டது.

ஒருமுறை செய்த உணவு மறுமுறை ரிப்பீட் ஆகாத அளவுக்கு சைனீஸ், தாய்லாந்து, இந்தியா போன்ற நாடுகளின் உணவுகளையும் சமைத்து மக்களுக்கு விருந்தளித்தனர். இதை அம்பானி மற்றும் அவருடைய மகன் அனந்த் அம்பானி, மருமகள் ராதிகா ஆகியோரும் மக்களுக்கு பரிமாறினார்கள். இதையெல்லாம் விட இந்த கொண்டாட்டத்தில் ரொம்ப முக்கியமான விஷயமும் நடந்துள்ளது. நிறைய பிசினஸ்க்கு இந்த ஃபங்ஷன் ஒரு ப்ரோமோஷன் ஆக இருந்துள்ளது. அதனால் தான் ரஜினி இந்தியாவிற்கே பெருமை என்று சொல்லி உள்ளார்.

Also Read: அம்பானி வீட்டு திருமண விழாவில் பேஸ்புக் ஓனர் மார்க்.. வாயடைக்க வைத்த சம்பவம்

Next Story

- Advertisement -