புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

AI Technology: என்னதான் AI வந்தாலும் இதுல வாய்ப்பே இல்ல.. நம்மளால மட்டுமே செய்யக்கூடிய வேலைகள் என்ன தெரியுமா.?

AI Technology: தற்போது ஏஐ டெக்னாலஜியின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. அதனாலயே கல்லூரியில் சேரும் மாணவர்களும் இந்த படிப்பை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அது மட்டும் இன்றி கடந்த வருடத்திலேயே AI தொழில்நுட்பத்தால் ஐடி துறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.

இதனால் நம் கண்டுபிடிப்பு நமக்கே ஆப்பாகும் சூழ்நிலையும் இருக்கிறது. ஆனால் என்னதான் மிஷின் பல வேலைகளை செய்தாலும் மனிதர்களால் மட்டுமே செய்யக்கூடிய வேலைகளும் இருக்கிறது.

AI டெக்னாலஜி

அந்த வகையில் மருத்துவத் துறையில் ரோபோக்கள் அறுவை சிகிச்சைகள் கூட செய்கின்றன. ஆனால் நோயாளிகளின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ற சிகிச்சை கொடுக்க மருத்துவர்கள் மட்டுமே முடியும்.

அதேபோல் நிதி ஆலோசகர்களின் வேலையை ஏ ஐ டெக்னாலஜி மூலம் செய்ய முடியாது. நம் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்து லாபம் பார்ப்பது குறித்த துல்லியமான கணிப்பு மனிதர்களால் மட்டுமே சொல்ல முடியும். இதற்கு அனுபவமும் ஒரு முக்கிய காரணம்.

மேலும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சட்டம் பற்றிய அனைத்தையும் அறிந்தவர்கள். அவர்களால் துல்லியமாக ஒரு வழக்கை கையாண்டு நீதியை நிலை நாட்ட முடியும். இதில் ஏஐ டெக்னாலஜி என்பது சாத்தியமில்லாத ஒன்று.

மனிதர்களின் திறமை

அதேபோல் இசை கலைஞர்களால் மட்டுமே மனிதர்களின் மனதை வருடக்கூடிய பாடல்களை கொடுக்க முடியும். AI மூலம் பாடல்களை உருவாக்குவது, பாடுவது எல்லாம் பெரிய அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தாது.

அது மட்டுமின்றி சுய தொழில், சமூக பணி ஆகியவற்றிலும் மனிதர்களின் பங்கு தான் முக்கியமானது. அவர்களால் மட்டுமே திறமையாக சிந்தித்து செயல்பட முடியும்.

இப்படியாக மனிதர்களின் அனுபவத்திற்கும் திறமைக்கும் முன் இந்த டெக்னாலஜி எல்லாம் நிற்கவே முடியாது. சுருக்கமாக சொல்லப்போனால் எந்திரன் படத்தில் ரோபோக்களால் எல்லாம் முடியும் என ரஜினி நிரூபிப்பார்.

ஆனால் அதெல்லாம் சினிமாவிற்கு வேண்டுமானால் சாத்தியமாகலாம். நிஜத்தில் வாய்ப்பே கிடையாது என்பதுதான் நிதர்சனம்.

- Advertisement -

Trending News