பேரு தான் வேற, ஆனா துட்டு ஒரே கம்பெனிக்கு தான்.. முட்டாளாக்கும் கார்ப்பரேட்டின் நரி தந்திரம்

Business: எல்லாமே கார்ப்பரேட் மயம் ஆகிவிட்ட இந்த சூழலில் மக்கள் நாளுக்கு நாள் முட்டாளாக்கப்பட்டு தான் வருகிறார்கள். அதில் ஒரு பொருளை வேறு வேறு பெயர்களில் விற்று காசு சம்பாதிக்கும் கார்ப்பரேட்டின் நரி தந்திரம் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

சற்று புரியும் படி சொல்லப்போனால் பொருள் ஒன்றுதான். ஆனால் அதற்கு பல பெயர்கள் இருக்கிறது. உதாரணத்திற்கு கடைக்கு சோப்பு வாங்க செல்கிறோம். ஒரு ரின் சோப் கொடுப்பா என்று கேட்கிறோம். உடனே கடைக்காரர் அது இல்லை சர்ஃப் எக்ஸல் தான் இருக்கு என சொல்கிறார்.

உடனே சரி அதையே கொடு என வாங்கி செல்கிறோம். அந்த இடத்தில் நமக்கு தேவை சோப்பு தான். எந்த பெயராக இருந்தாலும் பரவாயில்லை என்று வாங்கி செல்கிறோம். இவர்கள்தான் கஸ்டமர் அதாவது வாடிக்கையாளர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

அதுவே ரின் சோப் இல்லை என்றதும் வேறு கடைக்கு சென்று அதே பெயரில் இருக்கும் சோப்பை வாங்கி செல்பவர்கள் consumer அதாவது நுகர்வோர் என்று சொல்கிறோம்.

இந்த நுகர்வோரை தான் பல கம்பெனிகள் உருவாக்க முயற்சி செய்கின்றனர். ஏனென்றால் அவர்கள் அந்த கம்பெனி பொருட்களை விட்டு எங்கும் செல்ல மாட்டார்கள். அதனாலேயே பல கார்ப்பரேட் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை நுகர்வோராக மாற்றும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நுகர்வோராக மாறும் வாடிக்கையாளர்கள்

அதன் விளைவு தான் ஒரே பொருளை பல பெயர்களில் விற்பது. இதன் மூலம் வாடிக்கையாளரும் நுகர்வோராக மாற்றப்படுகிறார்கள். ஆக மொத்தம் மக்களின் துட்டு ஒரே கம்பெனிக்கு தான் போகிறது.

இது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. ஹார்லிக்ஸ், பூஸ்ட் இரண்டுமே வேறு வேறு நிறுவனம் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் இரண்டுக்குமே ஒரே ஓனர்தான்.

இதேபோல் கிளினிக் பிளஸ், டவ், சன்சில்க் அனைத்து ஷாம்பும் ஒரே நிறுவனத்தை சேர்ந்தது தான். மேலும் க்ளோசப், பெப்சோடெண்ட் இரண்டிற்கும் ஒரே ஓனர் தான். இப்படி பல உதாரணங்கள் இருக்கிறது.

இதையெல்லாம் தயாரிக்கும் நிறுவனம் தான் ஹிந்துஸ்தான் யுனிலிவர். இதன் தலைமையகம் யுனிலிவர் என்ற பெயரில் லண்டனில் உள்ளது. இந்தியாவில் ஹிந்துஸ்தான் என்ற பெயரில் இவர்கள் பல பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

நீங்கள் அன்றாடம் வாங்கும் சோப், பேஸ்ட், டீத்தூள் இவற்றின் கவர் பின்னால் இந்த கம்பெனியின் முத்திரை இருக்கும். ஆக மொத்தம் இது போன்ற கம்பெனிகள் எங்களுக்கு நாங்கள் தான் போட்டி என மக்களை நுகர்வோர்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

கார்ப்பரேட் உலகின் வியாபார தந்திரம்

Next Story

- Advertisement -