Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

20 தியேட்டர் வித்தியாசத்தில் முதலிடத்தில் துணிவா, வாரிசா.? ஆட்டநாயகனை உறுதி செய்த 25வது நாள்

துணிவு மற்றும் வாரிசு படங்கள் ரிலீஸ் ஆகி 25 நாட்களில், யார் ஆட்ட நாயகன் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

thunivu-varisu

ஜனவரி 11-ம் தேதி பொங்கலை முன்னிட்டு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு போன்ற இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது. அதிலும் பக்கா குடும்பம் சென்டிமென்ட் படமான வாரிசு பேமிலி ஆடியன்ஸை திரையரங்குகளில் சாரை சாரையாக அணி வகுக்க செய்தது.

அதே சமயம் இளசுகள் விரும்பும் வகையில் பக்கா ஆக்சன் படமாக இருந்த துணிவு படத்திருக்கும் அமோக வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் எட்டு வருடங்களுக்குப் பிறகு திரையில் மோதிக்கொள்ளும் தல தளபதி இருவரில் யார் படத்திற்கு அதிக வசூல்? யார் பாக்ஸ் ஆபிஸ் நாயகன்? என்பதை தெரிந்து கொள்ள சோசியல் மீடியாவில் அவர்களுடைய ரசிகர்கள் மல்லு கட்டுகின்றனர்.

Also Read: வாரிசு துணிவுக்கிடையே 100 கோடி வசூல் வித்தியாசம்.. கிளாஸ் விட்டு ஜெயிச்சு காட்டிய ஆட்ட நாயகன்

இதைத் தொடர்ந்து இரண்டு வாரம் முடிவில் 100 கோடி வித்தியாசத்தில் வாரிசு படம் தான் முன்னிலை வகுத்தது. ஆனால் இப்போது நிலைமையை தலைகீழாக மாறி இருக்கிறது. இந்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகி 25-வது நாளை எட்டிய நிலையில், 20 தியேட்டர் வித்தியாசத்தில் இப்போதும் திரையரங்குகளை ஆக்கிரமித்திருப்பது விஜய்யின் வாரிசு.

அதாவது ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் தமிழகத்தில் மட்டும் தற்போது 130 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் தமிழகத்தில் இப்போது 149 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி துணிவை மிஞ்சி கலக்கிக் கொண்டிருக்கிறது.

Also Read: தளபதி 67 விஜய்க்கு மட்டும் ஸ்பெஷல் இல்ல, த்ரிஷாவுக்கு அதைவிட ஸ்பெஷலாம்.. செம மேட்டரா இருக்கே!

இதன் மூலம் யார் ரியல் வின்னர் என்பது தெரிந்துவிட்டது. ஏனென்றால் படத்தின் வசூலை காட்டிலும் எந்த படம் அதிக நாட்கள் திரையரங்கில் ஓடுகிறது என்பதுதான் ஆட்ட நாயகனுக்கு அழகு. ஆகையால் வாரிசு ரிலீஸ் ஆகி 25 ஆவது நாட்களில் துணிவை விட 20 தியேட்டர்களில் அதிகமாக வெற்றி நடை போடுகிறது.

இந்த விஷயத்தை வைத்து தளபதி ரசிகர்கள் சோசியல் மீடியாவை ரணகளம் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அஜித், விஜய் பொருத்தவரை அவர்கள் அடுத்த படத்தில் தீவிரம் காட்டிக்கொண்டிருக்கின்றனர். விஜய் லியோ படத்தில், அஜித் ஏகே 62 படத்திலும் நடிக்க கிளம்பிவிட்டனர். ஆனால் இவர்களது துணிவு மற்றும் வாரிசு படத்தை குறித்து பரபரப்பு இப்போது வரை குறையாமல் இருக்கிறது.

Also Read: மகிழ் திருமேனியுடன் கைகோர்த்த இயக்குனர்.. வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்த ஏகே 62

Continue Reading
To Top