69 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தும் உதயநிதிக்கு ஏன் அமைச்சர் பதவி இல்லை? திமுக தரப்பில் கசிந்த உண்மை

தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த தேர்தல் தான் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல். அதில் திமுக அமோக வெற்றி பெற்று இன்று மு க ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார்.

மு க ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றாலும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் 69,000 மேல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் அவருக்கு ஏன் அமைச்சர் பதவி தரப்பட வில்லை என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது அதிமுகவிலிருந்து திமுகவிற்கு மாறிய செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவை பதவி கிடைத்திருக்கும் பொழுது அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு ஏன் கொடுக்கப்படவில்லை என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பினர்.

udhayanidhi-stalin
udhayanidhi-stalin

அதற்கு திமுகவின் அறிவாலயத்தில் இருந்து ஒரு பதில் கிடைத்துள்ளது. அதாவது எம்எல்ஏ என்பது மக்களால் கொடுக்கப்பட்ட ஒரு பதவி அது தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளது.

ஆனால் மந்திரி பதவி என்பது ஸ்டாலின் கொடுக்கக்கூடியது. ஏற்கனவே வாரிசு அரசியல் எனும் பெயர் பெற்று வரும் நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்தால் அது உண்மையாகிவிடும் என்பதால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என திமுக தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் தொடர்ந்து பல தலைவரிடம் பார்த்து வாழ்த்து பெற்று வரும் உதயநிதி ஸ்டாலின் அடுத்தடுத்து மக்களை சந்தித்து ஓரளவிற்கு மக்கள் மத்தியில் பெயர் பெற்றுவிட்டால் அடுத்ததாக மந்திரி பதவி அவருக்கு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்