தனி உரிமையை பாதிக்கும் ஐடி விதி.. இந்தியாவை விட்டு வெளியேற தயாராகும் வாட்ஸ் அப்

whatsapp
whatsapp

Whatsapp: வாட்ஸ் அப் செயலியை பல்லாயிரக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர். ஒரு நாளின் பாதி நேரத்தை இதிலேயே கழிக்கும் தலைமுறையும் உண்டு.

அதனாலேயே இந்த நிறுவனம் பல புது புது அப்டேட்டுகளை கொடுத்து மக்களை கவர்ந்து வருகிறது. அதில் ஒன்றுதான் எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன் (End to End Encryption).

இதன் மூலம் நாம் மற்றவருக்கு அனுப்பும் செய்திகளை பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆனால் மத்திய அரசு புதிய ஐடி விதியை கொண்டு வந்தது. அதன்படி நாட்டின் பாதுகாப்புக்காக பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற செயலிகள் மூலம் பகிரப்படும் செய்திகள் சேமிக்கப்பட வேண்டும் என மாற்றம் செய்யப்பட்டது.

இந்தியாவை விட்டு வெளியேறுவோம்

இதை எதிர்த்து வாட்ஸ் அப் நிறுவனம் வழக்கு தொடர்ந்த நிலையில் நேற்று இது விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் இந்த எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன் முறையால் நாட்டின் அமைதி சீர்குலைக்கப்படும்.

போலி மற்றும் தவறான செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படும் என வாதிட்டார். ஆனால் வாட்ஸ் அப் இது தனி உரிமையை பாதிக்கும் வகையில் இருக்கிறது. எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் கிடையாது.

இதை பின்பற்ற வேண்டும் என்றால் வாட்ஸ் அப் இந்தியாவை விட்டு வெளியேறும் என தன் வாதத்தை முன்வைத்தது. இதை விசாரித்த நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement Amazon Prime Banner