Connect with us
Cinemapettai

Cinemapettai

arun-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அருண் விஜய்க்கு என்னதான் ஆச்சு? அவசர அவசரமாக நடைபெறும் சிகிச்சை, வைரல் போட்டோஸ்

அருண் விஜய் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து அவருக்கு என்ன ஆச்சோ என்று ரசிகர்கள் பதறுகின்றனர்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் நடிகர் தான் அருண் விஜய். இவர் கடைசியாக ஹரி இயக்கத்தில் உருவான யானை படத்தில் நடித்திருந்தார். குடும்ப சென்டிமெண்ட் கொண்ட இந்த படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

அதன்பின் ஏ எல் விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தின் சண்டைக் காட்சியின் போது அருண் விஜய் தவறி கீழே விழுந்ததில் அவருடைய காலில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

Also Read: தானா பிரியாணிக்கு வந்து சிக்கிய ஆடு.. வாழ்நாள் ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்

இதைத்தொடர்ந்து சிகிச்சை எடுத்தும் வலி குறையாததால் வலியோடு அவதிப்பட்டு வந்த அருண் விஜய் கேரளாவில் உள்ள பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சையை அவசர அவசரமாக மேற்கொள்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை பதற வைத்திருக்கிறார்.

பாரம்பரிய ஆயுர்வேத முறையில் முழங்காலுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் பலனளித்து வருகிறதாம். நான்காவது நாள் சிகிச்சையில் காலில் ஏற்பட்டிருக்கும் வலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதால் சீக்கிரம் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்றும் அந்தப் புகைப்படத்துடன் கருத்து பதிவிட்டு இருக்கிறார்.

Also Read: 20 வருடங்களாக ஒரு வெற்றி படத்துக்காக தவம் கிடந்த அருண் விஜய்.. ஒரே கேரக்டர் வச்சு 8 வருடமாக கெத்தாக சுத்தும் ஹீரோ

மேலும் உடற்பயிற்சி மூலம் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அருண் விஜய் சண்டைக் காட்சியில் டூப் போடாமல் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் அதிரடி காட்டி வருகிறார். அவருக்கு இப்படி ஒரு காயம் ஏற்பட்டிருப்பது படக்குழுவை கலங்க வைத்திருக்கிறது.

இருப்பினும் சீக்கிரம் குணமடைந்து விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அருண் விஜய், அச்சம் என்பது இல்லையே என்ற படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக இயக்குனர் பாலாவின் படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் என்ற தகவலும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.

அவசர அவசரமாக அருண் விஜய்க்கு நடைபெறும் சிகிச்சை

arun-vijay-1-cinemapettai

arun-vijay-1-cinemapettai

Also Read: அருண் விஜய்க்கு திருப்பு முனையை ஏற்படுத்திய 5 படங்கள்.. நெகட்டிவ் ரோலில் கொடுத்த ரீ என்ட்ரி

Continue Reading
To Top