கான்ஸ்டபிள் முருகானந்தமாக வாழ்ந்திருக்கும் விஷால்.. லத்தி பட முழு விமர்சனம்

வினோத்குமார் இயக்கத்தில் நந்தா மற்றும் ரமணா ஆகியோர் தயாரிப்பில் விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் லத்தி. விஷால் நடிப்பில் சமீபகாலமாக வெளியான படங்கள் வெற்றி பெறாத நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் லத்தி படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்தை பற்றிய முழு விமர்சனத்தை இப்போது பார்ப்போம்.

கான்ஸ்டபிள் முருகானந்தமாக இருக்கும் விஷால் சில காரணங்களினால் பணியிடம் நீக்கம் செய்யப்படுகிறார். இதில் இவருடைய மனைவியாக சுனைனாவும், மகனாக மாஸ்டர் லிரிஷ் ராகவ் நடித்துள்ளனர். இந்நிலையை மகன் மீண்டும் விஷாலை போலீஸ் உடையில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமாக உள்ளான்.

Also Read : தொடர்ந்து 6 பட தோல்விக்கு பின் லத்தியை சுழட்டிய விஷால்.. நேர்மையான கொம்பனாக வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

ஆகையால் தனது மகனுக்காக மீண்டும் போலீஸ் பணியில் சேர போராடுகிறார் விஷால். அப்போது மேல் அதிகாரியாக இருக்கும் பிரபுவினால் மீண்டும் இவருக்கு வேலையில் சேரும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் பிரபு விஷாலுக்கு ஒரு நிபந்தனையும் வைத்துள்ளார். அதாவது தன்னுடைய கஸ்டடியில் இருக்கும் ஒரு நபரை துன்புறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

அந்த ரவுடி மிகப்பெரிய கேங்ஸ்டரின் தலைவன் என்று தெரியாமல் விஷால் துன்புறுத்துகிறார். இதனால் பல பிரச்சனைகளை விஷால் சந்திக்கிறார். ஒரு கட்டி முடிக்காத கட்டிடத்துக்குள் தன் மகனுடன் 100க்கும் மேற்பட்ட ரவுடிகளிடம் விஷால் மாட்டிக் கொள்கிறார். அதன் பின்பு தனது லத்தியால் ரவுடிகளை தும்சம் செய்கிறார்.

Also Read : விஷால் தொடர்ந்து மண்ணை கவ்விய 6 படங்கள்.. நாளை வெளியாகும் லத்தியாவது வாகை சூடுமா?

லத்தி படத்தில் முதல் பாதியில் இருந்த சுறுசுறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை. மேலும் சில காட்சிகள் நம்ப முடியாத அளவுக்கு முன்னும் பின்னும் முரணாக இருந்தது. ஆனால் விஷால் கான்ஸ்டபிள் முருகானந்தம் ஆகவே வாழ்ந்திருக்கார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தன்னுடைய கடின உழைப்பை இந்த படத்திற்காக போட்டுள்ளார்.

மேலும் சண்டைக் காட்சிகளுக்கும் நிறைய பயிற்சி எடுத்துள்ளார் என்பது தெரிகிறது. மொத்தத்தில் விஷாலுக்காக லத்தி படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள். இந்தப் படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே நடித்த பிரபுவும் தனது முத்திரையை பதித்து சென்றுள்ளார்.

சினிமாபேட்டை ரேட்டிங் : 3.5/5

Also Read : விஜய்யின் சோலியை முடிக்க திட்டம் தீட்டிய விஷால்.. வலையில் சிக்குவாரா தளபதி