புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

உங்க அப்பன் எதிர்க்க நிக்கான் அவர்ட்ட சொல்லு.. சோயப் அக்தரை பங்கம் செய்த வீரேந்திர சேவாக்

எப்பொழுதுமே கிரிக்கெட்டில் சில சண்டையிடும் சண்டக்கோழிகள் இருப்பார்கள். அந்த வகையில் களத்தில் எப்பொழுதுமே மோதிக் கொள்ளும் இருவர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் சோயப் அக்தர். இவர்கள் களத்தில் மட்டுமல்ல சமூக வலைத்தளத்திலும் ஒருவரை ஒருவர், சளைத்தவர்கள் இல்லை என மாறி மாறி பதிலடி கொடுப்பார்கள்.

பொதுவாக இந்தியா,பாகிஸ்தான் என்றால் அந்த போட்டி அனல் பறக்கும். அதிலும் அக்தர் மற்றும் சேவாக் இருவரும் எதிரேதிரி மோதிக்கொண்டால் ரசிகர்களுக்கு அதைவிட பரபரப்பு தேவையில்லை.. பல போட்டிகளில் அத்தரை வெளுத்து வாங்கி இருக்கிறார் வீரேந்திர சேவாக்.அதேபோல் அத்தரும், சேவாக் ஸ்டம்புகளை கீப்பருக்கு பின்னால் பறக்க விட்டிருக்கிறார்.

அப்படி ஒரு போட்டியில் அக்தர் மிகக் கடுமையாக விரேந்திர சேவாக்கை ஸ்லெட்ஜ்ஜிங் செய்து கொண்டிருந்தார். அந்த போட்டியில் சேவாக் கடுமையாக திணறிக் கொண்டிருக்கும் வேளையில், அத்தர் அவரை முடிந்தால் இந்த பந்தை ஃபுல் சாட் அடித்து பார் என கேலியும், கிண்டலும் செய்தார். சற்று பொறுமையை இழந்த சேவாக் அவருக்கு தகுந்த பதிலடி ஒன்று கொடுத்தார்.

எதிர்முனையில் உங்க அப்பன் நின்று கொண்டிருக்கிறார் அவரிடம் சொல்லு என்று பதிலடி கொடுத்தார். எதிர்முனையில் நின்று கொண்டு இருந்தது கிரிக்கெட் கடவுள் குட்டி சைஸ் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இது அக்தருக்கு பெரிய அவமானத்தை ஏற்படுத்தியது. வீரேந்திர சேவாக், சச்சின் இருவரையும் இந்த போட்டியில் ஒரு கை பார்த்து விட வேண்டும் என்ற வெறியில் அத்தர் பவுன்சர் பந்துகளையும், ஆக்ரோச வேகத்தையும் காட்டிக் கொண்டிருந்தார்.

அதே வெறியோடு அத்தர் சச்சினுக்கு ஒரு பவுன்சர் பந்தை வீச, அவர் அசால்டாக அதை புல்சாட்டில் சிக்ஸ் அடித்தார். இதை சற்றும் எதிர்பாராத சோயப் அக்தர் தலை குனிந்து வீரந்தர சேவாக் பக்கம் வரவே இல்லை. இதைப் போல பல போட்டிகளில் சச்சினும், சேவாக்கும் சேர்ந்து சோயப் அக்தரின் பவுன்சர் பந்துகளை சிக்ஸர்களாக பறக்க விட்டிருக்கின்றார்கள்.

இப்படி அக்தருக்கு மட்டுமின்றி பல பேகப்பந்துவீச்சாளர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் பதிலடி கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக்ராத், வார்னே, போன்ற பவுலர்களும் சச்சின் இடம் வாலாட்டி அருபட்டு சென்றுள்ளனர். ஒருமுறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஷேன் வார்னே,சச்சினை அவுட் ஆக்க முடியாமல் திணறினார். போட்டி முடிந்த பின்னர்வார்னே தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி சச்சினிடம் கையெழுத்து வாங்கிவிட்டு சென்றார்.

- Advertisement -spot_img

Trending News