சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற இனியா சீரியல் தற்போது அனைவர் மனதிலும் இடம் பிடித்து வருகிறது. இதற்கு காரணம் இனியா மற்றும் விக்ரமனின் நடிப்புதான். அதிலும் விக்ரமுக்கு ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனாலும் இப்ப வரை இவர் கெட்டவரா, இல்லை என்றால் நல்லவராக மாறிவிட்டாரா என்று பெரிய குழப்பத்தில் தான் போய்க்கொண்டிருக்கிறது.
இருந்தாலும் இனியா விஷயத்தில் விக்ரம் பண்ணுவதை பார்க்கும் பொழுது ரசிக்கும் படியாக தான் இருக்கிறது. இவர்களுடைய ரொமான்ஸ் ஒவ்வொரு நாளும் ரொம்பவே கூடிக் கொண்டிருக்கிறது. இனியாவை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று கொக்கி குமார், விக்ரமிடம் நேருக்கு நேர் சவால் விட்டிருக்கிறார். இதை கண்டு கொள்ளாமல் இருந்தாலும் விக்ரம் அடிமனதில் ஒரு பயம் வந்துவிட்டது.
Also read: குணசேகரனுக்கு சரியான ஆளு நந்தினி.. ஜனனி கஸ்டடியில் அருண்
அதனால் இனியாவிடம் இனிமேல் நீ எங்க போனாலும் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு தான் போகணும் என்று கண்டிஷனோடு கூறியிருக்கிறார். இவர்கள் சந்தோஷமாக இருப்பதை பார்த்து கோபப்படும் நல்லசிவம் ஒவ்வொரு முறையும் இனியாவை மட்டம் தட்டி பேசுகிறார். ஆனால் இதற்கெல்லாம் அசராத இனியா அவருக்கு உடனே பதிலடி கொடுத்து விடுகிறார்.
அடுத்ததாக இனியாவை, விக்ரம் அம்மா தூண்டிவிட்டு நீ தான் அவன் மனதை முழுமையாக மாற்ற வேண்டும். அது உன்னால் முடியும் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. விக்ரம் மறுபடியும் அவருடைய அப்பா பேச்சைக் கேட்டு கெட்டவனா மாறிட கூடாது என்ற பயம் எனக்கு இருக்கிறது. அதனால் கூடிய சீக்கிரம் நான் எதிர்பார்க்கிற மாதிரி ஒரு நல்ல விஷயத்தை நீ எனக்கு சொல்லணும் என்று இனியாவை உசுப்பேத்தி விடுகிறார்.
Also read: உயிரைக் காப்பாற்றும் ராதிகா.. உருட்டுறதுக்கு கதையில்லாமல் சன் டிவியை பாலோ செய்யும் விஜய் டிவி
மேலும் விக்கிரமும், இனியாவிடம் பேசும்போதெல்லாம் அவருக்கு ஏதாவது ஒரு விஷயம் மூலமாக அவர் ஜெயிலுக்கு போய் அவமானப்பட்டதை ஞாபகம் வந்து விடுகிறது. இதனால் அவரால் எப்போதும் போல சகஜமாக இனியாவிடம் சில சமயங்களில் பேச முடியாமல் போய்விடுகிறது. இதற்காகத்தான் விக்ரம் இனியாவிடம் எனக்கு கொஞ்சம் டைம் வேணும் என்று கேட்டிருக்கிறார்.
இதற்கு இடையில் இனியாவை பற்றி கொக்கி குமார் பேசினதால் விக்ரம் அவருடைய மனைவியை பொக்கிஷமாக பாதுகாக்கிறார். அத்துடன் சும்மாவே யாரையும் இனியவை பற்றி தப்பா பேச விட மாட்டார். இப்பொழுது ரவுடி இந்த மாதிரி பேசினா சும்மா விடுவாரா. இதற்கெல்லாம் சேர்த்து தான் இனி விக்ரமுடைய ஆட்டம் ஆரம்பிக்க போகிறது.
Also read: குணசேகரனின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட மக்கு ஆதிரை.. விசாலாட்சி எடுக்க போகும் முடிவு என்ன