புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

விஜய் டீலில் விட்டதால் சிவகார்த்திகேயனிடம் தஞ்சம் அடைந்த திருட்டு இயக்குனர்.. வேற லெவல் சம்பவம் இருக்கு

சிவகார்த்திகேயன் பிரின்ஸ் பட தோல்விக்கு பிறகு தற்போது முழு வீச்சாக அடுத்தடுத்த பட வேலைகளில் பிஸியாக உள்ளார். அதன்படி இப்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார்.

மேலும் முன்பே வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி முழுக்க முழுக்க காமெடி ஜானரில் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு கூட்டணியில் ஒரு படம் உருவாக இருக்கிறது. சமீபத்தில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சிவகார்த்திகேயனின் படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது.

Also Read : சிவகார்த்திகேயன் போல் மாட்டிக்கொண்டு முழிக்கும் சந்தானம்.. பழைய ரூட்டை கையில் எடுத்த கொடுமை

அடுத்தடுத்த படங்களை கைவசம் வைத்துள்ள சிவகார்த்திகேயன் விஜய் பட இயக்குனருடன் கூட்டணி போட இருக்கிறாராம். அதாவது விஜய்க்கு சர்கார், கத்தி என ஹிட் படங்களை கொடுத்தவர் ஏ ஆர் முருகதாஸ். மேலும் இவர் இந்த படங்களில் வேறு படத்தின் கதையை திருடியதாகவும் சர்ச்சை வெடித்தது.

இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு முன்னதாகவே விஜய், முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைவதாக தகவல் வெளியானது. ஆனால் சில காரணங்களால் முருகதாஸ் டீலில் விட்ட விஜய் லோகேஷ் உடன் கூட்டணி போட்ட மாஸ்டர் பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார். அதன் பின்பு நெல்சன், வம்சி என அடுத்தடுத்த இயக்குனர்களுக்கு விஜய் வாய்ப்பு கொடுத்தார்.

Also Read : அக்கடதேசத்தில் துரத்தி விடப்பட்ட இயக்குனர்.. சிம்பு ரிஜெக்ட் செய்த கதையில் சிக்கிய சிவகார்த்திகேயன்

ஆகையால் இப்போது ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயனிடம் தஞ்சம் அடைந்ததால் இவர்களது கூட்டணியில் ஒரு படம் உருவாகுவது உறுதியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவின் படத்தில் நடித்த பிறகு முருகதாஸ் படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

பொதுவாக முருகதாஸ் சமூக அக்கறை உள்ள கருத்துக்களை தன்னுடைய படங்களின் மூலம் மக்களுக்கு கொண்டு செல்வார். விஜய்க்கு அடுத்த இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பார் என ரசிகர்கள் கூறி வந்த நிலையில் இவர்களது கூட்டணியில் வெளியாகும் படம் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : டாப் ஹீரோக்களின் மார்க்கெட்டை குறைக்கும் 3 இயக்குனர்கள்.. மீள முடியாமல் தவிக்கும் சிவகார்த்திகேயன்

- Advertisement -

Trending News