கேப்டனின் வீழ்ச்சிக்கு இந்த ரெண்டு பெண்களின் சதி, பேராசை மட்டுமே காரணம்.. பரபரப்பு கிளப்பிய பிரபலம்

Reason for the downfall of Vijayakanth: நடிகரும் தேமுதிக கட்சி தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் நேற்று அதிகாலை உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும், அரசியல் தலைவர்களும், பொது மக்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் கேப்டனை பற்றிய பேச்சு தான். அரசியலிலும் சினிமாவிலும் தனி ஆதிக்கம் செலுத்திய விஜயகாந்தின் வீழ்ச்சிக்கு இரண்டு பெண்களின் சதி, பேராசை தான் காரணம் என அரசியல் விமர்சகர்மான ஊடகவியலாளர் சுமன் கவி பரபரப்பான பேட்டியை அளித்துள்ளார்.

அரசியலுக்கு ரொம்பவே முக்கியமான நிர்வாக திறமை கேப்டனுக்கு அதிகமாகவே இருந்தது. அவர் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது இவருடைய திறமை வெளிப்பட்டது. மலேசியா, துபாய்க்கு சென்று நிதி திரட்டுவது அதற்காக ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட பெரிய பெரிய நடிகர்களை ஒன்று சேர்த்து செயல்படுத்தினார். அது மட்டுமல்ல கிடைத்த நிதியையும் அவர் சரியாக பயன்படுத்தினார். முரட்டு துணிச்சல் கொண்ட கேப்டன் மக்கள் மத்தியில் தேமுதிக என்ற அரசியல் கட்சியை துவங்கி, கட்சித் தலைவராகவும் ரவுண்டு கட்டினார். அவருடைய தைரியமான துணிச்சல்தான் மக்களிடம் வாக்காக மாறியது.

Also Read: இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் தவிக்கும் நன்றி கெட்ட நடிகர்.. செய்நன்றி மறந்தால் இப்படித்தான்

விஜயகாந்தின் வீழ்ச்சிக்கு காரணம்

2005ல் கட்சி ஆரம்பித்து 2006ல் எலக்ஷனில் நின்று எம்எல்ஏவாகவும் ஆகிறார். அதுவும் 8% வாக்குகளை முதல் எலெக்ஷனில் பெற்று எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்தார். இவருடைய வீழ்ச்சிக்கு இரண்டு பெண்கள் முக்கிய காரணமாக இருந்துள்ளனர் என்று சுமன்கவி வெளிப்படையாக போட்டுடைத்து அம்பலப்படுத்தினார். விஜயகாந்த் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த போது, அவர் கோபப்பட்டு செய்த விஷயத்தை எல்லாம் ஹீரோயிசமாக பார்த்தனர்.

ஆனால் ஜெயலலிதாவுடன் முரண்பாடு ஏற்பட்ட பிறகு, அவருடைய மேடைப் பேச்சை வைத்து கோமாளி ஆக்கிவிட்டனர். இதையெல்லாம் திட்டமிட்டு தான் செய்தார்கள். அதன் பின்பு ஜெயலலிதா, கேப்டனின் கைவசம் இருந்த எம்எல்ஏக்களை ஒவ்வொருவராக உருவுகிறார். கேப்டனின் பின்னடைவிற்கு காரணம் ஜெயலலிதாவின் சதி முக்கிய காரணமாக இருந்தது. அத்துடன் பிரேமலதாவின் பேராசையும் கேப்டனின் அரசியல் வாழ்க்கையை குழி தோண்டி புதைத்து விட்டது.

பிரேமலதா சீட்டுக்காகவும் பணத்திற்காகவும் மக்களின் வாக்குகளை கையில் வைத்துக் கொண்டு பேரம் பேசியது கேப்டனின் மதிப்பு மரியாதையை குறைத்துவிட்டது. வயதான தளர்ந்த நேரத்திலும் அவரை வீல்சேரில் வைத்துக் கொண்டு, அவருடைய பாப்புலாரிட்டியை விற்பதற்கு முயற்சி செய்தார். எல்லை மீறிய இந்த செயல் கேப்டனின் முடிவுக்கு காரணம் ஆகிவிட்டது. இனிமேலாவது கேப்டனின் ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும் என்று சுமன்கவி கூறினர். இனி பிரேமலதா தேமுதிக கட்சியின் தலைவராக இருந்து கொண்டு ஜெயலலிதாவை ரோல் மாடலாக வைத்து அரசியல் பண்ணப் போவதாகவும் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே தேமுதிக, பணத்திற்காக பேரம் பேசியே மாறிமாறி கூட்டணி வைத்துக்கொண்டு மதிப்பை இழந்து விட்டது. கிட்டத்தட்ட விஜயகாந்தின் நிலைமையில் தான் அந்த கட்சியும் இருக்கிறது. அதை பிரேமலதா உயிர்ப்பிக்கும் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் தேமுதிக ஒரு தனி நபரின் கட்டமைப்பாக இருந்தால், அது விளங்காது. கொள்கையை வைத்து செயல்பட்டால் மட்டுமே உருப்பட முடியும் என்று பரபரப்பான பேட்டியை அளித்துள்ளார்.

Also Read: ஈடுகட்ட முடியாத இழப்பு.. கடைசியா நண்பனின் முகத்தை பார்க்க ஓடி வந்த ரஜினியின் புகைப்படம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்