ரஜினியின் சம்பளத்தை தொட கூட முடியாத விஜய்.. முட்டி மோதினாலும் வாய்ப்பு இல்ல தளபதி

Actor Vijay: அந்த காலத்தில் இருந்தே ரஜினி, கமல் இருவருக்கும் தான் தொழில் ரீதியான போட்டி இருந்து வருகிறது. ஆனால் இப்போது சூப்பர் ஸ்டார் இடத்தை விஜய் நிரப்பி விட்டார் என பேசப்படுகிறது.

அதற்கேற்றார் போல் கடந்த சில வருடங்களாக சர்ச்சை செய்திகளும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. அதேபோல் இரு தரப்பு ரசிகர்களும் யார் நம்பர் ஒன் என போட்டி போட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் ரஜினியின் அதிகபட்ச சம்பளம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வரும் அவருக்கு 200 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.

ரஜினியின் சம்பளத்தை எட்ட முடியாத விஜய்

இதற்கு அடுத்ததாக தலைவர் 171 ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அதற்காக சூப்பர் ஸ்டாருக்கு 260 லிருந்து 280 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதை ஒப்பிட்டு பார்க்கும்போது விஜய்க்கு கொஞ்சம் குறைவு தான். தற்போது கோட் படத்தில் நடித்து வரும் இவர் அடுத்ததாக தளபதி 69 படத்திற்கும் தயாராகி வருகிறார்.

இந்த படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு தீவிர அரசியலிலும் ஈடுபட உள்ளார். அதனாலயே இப்படத்தின் இயக்குனர் யார் என்பது மிகப்பெரும் சஸ்பென்ஸ் ஆக உள்ளது.

இருப்பினும் அட்லி, நெல்சன், கார்த்திக் சுப்பராஜ், எச் வினோத் ஆகியோர் பட்டியலில் இருக்கின்றனர். இதை ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த DVV நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இதற்காக 250 கோடி வரை விஜய்க்கு சம்பளம் பேசி இருக்கிறார்களாம். இதைக் கேள்விப்பட்டு தான் சூப்பர் ஸ்டார் 10, 20 கோடி அதிகம் வேண்டும் என கேட்டு இருக்கிறார்.

இதற்கு முக்கிய காரணம் அவர் அரசியலுக்கு வருவேன் என்று ஜகா வாங்கி விட்டார். ஆனால் விஜய் தற்போது களத்தில் குதித்துள்ளார். அதனால் ரஜினியின் பெயர் டேமேஜ் ஆகி இருக்கிறது.

அதன் காரணமாகவே சினிமாவில் கெத்தை விடக் கூடாது என அவர் திட்டமிட்டு இருக்கிறார். இதுதான் இந்த அதிகபட்ச சம்பளத்திற்கு காரணமாகவும் சொல்லப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்