அர்ச்சனாவுக்கு டஃப் கொடுக்க வரும் விஜய் டிவியின் அராத்து.. இந்த சீசனில் நிச்சயம் சம்பவம் இருக்கு

archana
archana

விஜய் டிவியின் ஃபேவரட் என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 6ன் கிராண்ட் ஃபினாலே வரும் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது. கடந்த ஐந்து சீசன்களில் தொகுத்து வழங்கிய கமலஹாசன் தான் இந்த சீசனில் தொகுத்து வழங்குவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த சீசனில் தரமான போட்டியாளர்களை தேர்வு செய்திருக்கும் விஜய் டிவி, செம அராத்துகளை தரையிறக்கி உள்ளது. அதிலும் ஜீ தமிழில் சத்யா சீரியலில் ரவுடி பேபி ஆக ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ஆயிஷா, மற்றும் யாரடி நீ மோகினி சீரியலின் மூலம் பிரபலமான நடிகை ஸ்ரீநிதி உள்ளிட்டோரும் பிக் பாஸ் சீசன் 6ல் பங்கேற்க உறுதி ஆகி உள்ளனர்.

Also Read: கிராண்ட் ஃபினாலே உடன் துவங்கப்படும் பிக் பாஸ் சீசன் 6.. ஊத்தி மூடப்பட்ட புத்தம்புது சீரியல்

இவர்களுக்கெல்லாம் போட்டியாக விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் முன்பு அர்ச்சனா கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்த விஜே அர்ச்சனா மற்றும் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் முன்பு நடித்த ரோஷினி ஹரிப்ரியன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

மேலும் தொகுப்பாளராகவும், சின்னத்திரை சீரியல் நடிகையாகவும் தற்போது சினிமாவிலும் கலக்கிக் கொண்டிருக்கும் மைனா நந்தினி மற்றும் விஜே மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்டோரும் இந்த சீசனில் உறுதியான போட்டியாளர்களாக உள்ளனர்.

Also Read: கண்ணமாவை அடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் விவாகரத்து நடிகை.. வைரலாகும் புகைப்பட ஆதாரம்

இவர்களைத் தொடர்ந்து ஒவ்வொரு சீசனிலும் மாடல் அழகிகள் பங்கேற்பது வழக்கமானது ஒன்று என்பதால், இந்த சீசனில் மிஸ் பாண்டிச்சேரி அழகிப் பட்டத்தை வென்ற ரேச்சல் பங்கேற்க உள்ளார். கருப்பாக இருந்தாலும் தனி அழகுதான் என்பதை நிரூபித்தவர் இவர்.

rachel-cinemapettai
rachel-cinemapettai

2020-21ல்  மிஸ் பாண்டிச்சேரி, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019 போன்ற பட்டங்களை வாங்கிக் குவித்தவர். 20 போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் பிக் பாஸ் சீசன் 6ல்  இரண்டு போட்டியாளர்கள் மக்களிடம் இருந்து தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

Also Read: பெரிய மைனாவுக்கு வலை விரித்த பிக்பாஸ் டீம்.. தானாக சிக்கிய சின்ன மைனா

மேலும் இரண்டு போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்கப் போகின்றனர். விஜய் டிவியில் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப் போகிறது.

Advertisement Amazon Prime Banner