வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

60 லட்ச மதிப்புள்ள வீட்டை தட்டி தூக்கிய சூப்பர் சிங்கர்.. ஒன்பது சீசன்களில் முதல் முதலாக டைட்டிலை வென்ற பெண்மணி

Super Singer: என்டர்டைன்மென்ட் ஷோ என்றாலே அது விஜய் டிவி தான். அந்த அளவிற்கு ரசிகர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் திறமையான பாடகர்களை சினிமாவிற்கு புகுத்துகின்றனர். சீனியர், ஜூனியர் என இரண்டு விதமாக நடைபெறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சீனியருக்கான 8 சீசன்கள் நிறைவடைந்து தற்போது ஒன்பதாவது சீசனின் கிராண்ட் பினாலே நேற்று நடைபெற்றது.

இதில் இறுதிச்சுற்றில் அபிஜித், அருணா, பூஜா, பிரியா, பிரசன்னா ஆகிய ஐந்து பேர் நேருக்கு நேராக போட்டியிட்டனர். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் முதலாக சூப்பர் சிங்கர் டைட்டிலை ஒரு பெண் தட்டி தூக்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Also Read: தாலி சென்டிமென்ட் வைத்து உருட்டும் விஜய் டிவி.. புரட்சி செய்யும் எதிர்நீச்சல்

இறுதிப் போட்டியில் பல சுற்றுகள் நடைபெற்றது. இதில் பலரும் அபிஜித் தான் வின்னர் ஆவார் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென்று அதிரடி திருப்பமாக மக்கள் வாக்குகளின் அடிப்படையிலும் நடுவர்களின் மதிப்பெண்களை வைத்து போட்டியாளர் அருணா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்

இவருக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஹாரிஸ் ஜெயராஜ் பரிசளித்தார். மயிலாடுதுறையை பூர்வீகமாக கொண்ட அருணா நிறைய மேடை நிகழ்ச்சிகளில் பாடகியாக பாடி கொண்டிருந்தவர், அவருக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் இனிமேல் திரைத்துறையில் நிறைய பாடல்கள் பாட வாய்ப்புகள் குவியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: சம்யுக்தாவை குறித்து பகிரங்கமாக பேசி சர்ச்சையை கிளப்பிய விஜய் டிவி ராஜலஷ்மி.. இப்படியா பேசி கேவலப்படுத்துவது!

அருணா வின்னராக தேர்ந்தெடுத்த பிறகு முதல் ரன்னரப் ஆக பிரியா தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது ரன்னரப் பிரசன்னா, மூன்றாவது ரன்னர் பூஜா என அடுத்தடுத்த பரிசுகள் வழங்கப்பட்டது. ஐந்தாவது இடம்தான் அபிஜித்துக்கு கிடைத்தது. இறுதிச்சுற்றுக்கு முதல் ஆளாக தேர்வு செய்யப்பட்ட அபிஜித் மக்கள் ஓட்டின் அடிப்படையிலும் நடுவர்களின் வாக்கின் அடிப்படையிலும் கிராண்ட் பினாலேவில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது பலருக்கும் ஷாக் அளித்தது.

இவருக்கு முதலிடம் கிடைக்காவிட்டாலும் இரண்டாவது மூன்றாவது இடம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், கடைசியிடத்திற்கு தள்ளப்பட்டது விஜய் டிவி ஏதோ தில்லாலங்கடி வேலையை இந்த முறையும் பார்த்து விட்டது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்கின்றனர். இருப்பினும் முதல் இடத்தை பெற்ற அருணாவிற்கு சோசியல் மீடியாவில் பலரும் தங்கள் பாராட்டுகளை குவிக்கின்றனர்.

Also Read: பிக் பாஸ் சீசன் 7 எப்போது தெரியுமா.? 50 கோடி சம்பளத்தை உயர்த்திய விஜய் டிவி

- Advertisement -

Trending News