சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

தாலி சென்டிமென்ட் வைத்து உருட்டும் விஜய் டிவி.. புரட்சி செய்யும் எதிர்நீச்சல்

Ethir Neechal, Vijay Tv: சின்னத்திரை தொடர்கள் ரசிகர்களின் வாழ்க்கையோடு ஒன்றிவிடுகிறது. வாரம் ஆறு நாட்கள் சீரியல் பார்த்துவிட்டால் தான் தூக்கமே வரும் என்ற நிலைக்கு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதை பயன்படுத்திக் கொண்டு சீரியல் இயக்குனர்கள் மக்களுக்கு நல்ல கருத்துக்களை விதைக்கலாம்.

ஆனால் பெரும்பாலான தொடர்களில் எப்படி ஒருவரின் குடும்பத்தை கெடுப்பது போன்ற விஷயங்களை தான் அதிகம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர் டிஆர்பியில் முதல் இடத்தை வகித்து வருகிறது. காரணம் இதற்கான கதை மற்றும் டயலாக் ரைட்டிங் தான்.

Also Read : குணசேகரன் உருவானது எப்படி.? எதிர்நீச்சல் ஷாக்கிங் சீக்ரெட்டை உடைத்த திருச்செல்வம்

திருச்செல்வம் இயக்கத்தில் உருவாகி வரும் இத்தொடரிலும் வில்லன், வில்லி என்ற கதாபாத்திரங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதையும் தாண்டி இன்னும் பல இடங்களில் ஆண் ஆதிக்கம் உள்ளதால் பெண்கள் எவ்வாறு முடங்கி கிடக்கிறார்கள் என்பதையும், அதிலிருந்து எப்படி வெளிவருவது ஆகிய விஷயங்களை எடுத்து உரைத்து வருகிறார்.

இப்போது பரபரப்பாக சென்று கொண்டிருப்பது ஆதிரை கல்யாணம் தான். விருப்பமில்லாதவன் கட்டாயத்தினால் தாலி கட்டிவிட்டான் என்றால் அவனுடன் தான் வாழ வேண்டும் என பல படங்கள் மற்றும் நாடகங்களில் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை தகர்த்தெறிய வேண்டும் என்பதற்காக ஆதிரை இப்போது கரிகாலன் கட்டிய தாலியை கழட்டி எறிந்து விட்டார்.

Also Read : துணிச்சலாக தூக்கி எறிந்த கரிகாலனின் தாலி.. குணசேகரனை விட சொர்ணா அக்காவாக மாறிய ஆதிரை

நிஜ வாழ்க்கையில் இப்படி நடந்தால் குடும்பம் எப்படி நினைக்கும் என்பதை தாண்டி, மக்கள் எல்லோருமே இதற்கு வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள். இதுவே திருச்செல்வத்தின் புரட்சி ஆக பார்க்கப்படுகிறது. ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி தொடரில் சூர்யா மீது வெண்ணிலாவுக்கு விருப்பம் இருக்கிறது.

ஆனாலும் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியராக இருக்கும் சூர்யா, வெண்ணிலாவுக்கு தெரியாமலே தாலி கட்டுகிறார். அதையும் குடும்பத்திற்கு தெரியாமல் வெண்ணிலா தாலியை பாதுகாத்து வருகிறார். பெண்களுக்கே தெரியாமலோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ தாலி கட்டினால் அதை சுமந்து தான் ஆக வேண்டும் என்பது என்ன நியாயம். ஆனாலும் தாலி செண்டிமெண்ட்டை வைத்து தான் இப்போது விஜய் டிவி சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது.

Also Read : காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கொத்திட்டு போனான்.. ஜனனியை நம்பி மோசம் போன ஆதிரை

- Advertisement -

Trending News