பாக்கியலட்சுமி சீரியலுக்கு சுபம் போட போகும் விஜய் டிவி.. சித்தார்த்துடன் ஜோடி போட வரும் பிக் பாஸ் போட்டியாளர்

New serial Coming: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் ஆரம்பித்த கொஞ்சம் வருடங்கள் மக்களின் பேவரைட் நாடகமாக இடம் பிடித்தது. ஆனால் போகப் போக கதை மாறிக்கொண்டு ரெண்டு பொண்டாட்டி மற்றும் ரெண்டு கணவர்களின் கதை வைத்து மட்டமாக உருட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் இப்பொழுது இந்த நாடகத்தின் டிஆர்பி ரேட் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் இந்த நாடகத்தை முடித்து விடலாம் என்று கதை கொஞ்சம் வேகமாக நகர்ந்து வருகிறது. அதாவது செழியன் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் ஜெனி மனசு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

அதே நேரத்தில் இவர்களுடைய சந்திப்பு கண்டிப்பாக பாசிடிவ் ஆக அமையும் என்று பாக்யா அதற்கு ஏற்பாடு பண்ணுகிறார். இதற்கு இடையில் பாக்கியாவும் சொந்த காலில் நின்னு ஜெயித்துக் காட்டிவிட்டார். தற்போது கோபி மட்டும் திருந்தாமல் சுற்றிவர நிலையில் இவருக்கும் ஒரு கதையைக் கொண்டு வந்து மொத்தமாக நாடகத்தை முடித்து விடுவார்கள்.

புத்தம் புது சீரியலில் என்ட்ரி கொடுக்கும் கண்ணம்மா

அதன் பின் புத்தம் புது சீரியலாக பனி விழும் மலர்வனம் என்ற நாடகம் விஜய் டிவியில் வரப்போகிறது. இதில் ஈரமான ரோஜா சீரியலில் நடித்த சித்தார்த் ஹீரோவாக நடிக்கப் போகிறார். இவருக்கு ஜோடியாக பாரதி கண்ணம்மா சீரியல் நடித்த வினுஷா என்டரி கொடுக்கப் போகிறார்.

ஆரம்பத்தில் ஐடி ஊழியராக வேலை பார்த்த வினுஷா விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்ததன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்றார். அதில் பாதியிலேயே வெளியேறியதால் தற்போது வரை எந்த சான்ஸும் கிடைக்காமல் இருந்த இவருக்கு விஜய் டிவி வாய்ப்பு கொடுத்து இருக்கிறது.

மேலும் தமிழும் சரஸ்வதி நாடகத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து வரும் அர்ஜுனும் நடிக்க இருக்கிறார். அத்துடன் ஜீ தமிழில் அண்ணா சீரியலில் முத்துப்பாண்டி கேரக்டரில் நடிக்கும் சத்யாவும் இதில் வில்லனாக நடிக்க போகிறார். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்