மகான் படத்துல தப்பு செஞ்சிட்டிங்க.. தயாரிப்பாளரை விளாசிய விஜய்

Mahaan-Vijay: விஜய்யின் லியோ படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அதில் பலரும் எதிர்பார்க்காத அதிர்ச்சிகரமான தகவலையும் லலித் கூறியிருக்கிறார். அந்த வகையில் லியோ படம் ஆயிரம் கோடி வசூலிக்காது என்று கூறியிருந்தார்.

காரணம் ஹிந்தி சினிமாவில் லியோ படத்திற்கு அவ்வளவு எதிர்பார்ப்பு இல்லை என்பதை அவர் வெளிப்படையாகவே பேசி இருந்தார். விக்ரம் நடிப்பில் வெளியான மகான் படத்தில் நீங்கள் தவறு செய்து விட்டீர்கள் என்று லலித்தை திட்டினாராம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பில் மகான் படம் உருவாகி இருந்தது.

இந்த படத்தை லலித் தயாரித்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகாமல் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி இருந்தது. அப்போது லலித்துக்கு போன் செய்து திட்டினாராம். மகான் படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது இந்த படத்தை போய் ஓடிடியில் ரிலீஸ் செய்து தப்பு பண்ணிட்டியே, இதை தியேட்டரில் செய்திருக்க வேண்டும் என விஜய் கூறினாராம்.

ஆனாலும் அந்த படம் ஓடிடியில் வெளியாகியும் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இந்த சூழலில் தியேட்டரில் வெளியாகி இருந்தால் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்திருக்க கூடும். ஓரளவு ஓடிடி என்பதால் முன்பே பணம் பேசப்பட்டிருந்ததால் தயாரிப்பாளர் தலை தப்பியது. இந்த சூழலில் விஜய் மகான் படத்தை ஆகா, ஓகோ என்று புகழ்ந்து சொல்லி இருப்பது வேடிக்கையாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ஒருவேளை லியோ படத்தையும் இதே எதிர்பார்ப்புடன் தான் விஜய் வெளியிட்டு இருப்பாரோ என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். ஏனென்றால் லியோ படம் இப்போது ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. ஆரம்பத்தில் ஜெயிலர் வசூலை லியோ முறியடித்து விடும் என பலரும் கூறி வந்தனர்.

அதேபோல் முதல் நாலே நூறு கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்து. ஆனாலும் இரண்டாம் நாளில் மிகக் குறைவான அளவு தான் வசூல் பெற்றுள்ளது. இவ்வாறு தன்னுடைய படத்திலேயே தவறான கணக்கு போட்டுள்ள விஜய் மகான் படத்தைப் பற்றி இப்படியா சொல்லி உள்ளார் என்று வேடிக்கையாக இருக்கிறது. ஒருவேளை விஜய் பேச்சை முன்கூட்டியே லலித் கேட்டிருந்தால் தலையில் துண்டை போட்டிருக்க வேண்டியது தான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்