Connect with us
Cinemapettai

Cinemapettai

master-salman-khan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் படத்தில் நடிக்க மறுத்த சல்மான்கான்.. காரணம் கேட்டு அதிருப்தியில் படக்குழு

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் மெர்சல், சர்கார் மற்றும் சமீபத்தில் வெளியான மாஸ்டர் உட்பட அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

குறிப்பாக மாஸ்டர் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. காரணம் இப்படத்தில் விஜய் மட்டுமின்றி விஜய் சேதுபதியும் நடித்திருந்தது தான். இருவருமே தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக ஏற்று நடித்து இருந்தனர். உண்மையை சொன்னால் விஜயைவிட விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்தது.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற படங்களின் இதர மொழிகளில் ரீமேக் செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் மாஸ்டர் படத்தையும் பல மொழிகளில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டினர். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை எண்டெமால் ஷைன் நிறுவனம் பெற்றுள்ளது.

மேலும் ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹிந்தியில் விஜய் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானை கேட்டுள்ளனர். சல்மான்கானும் மாஸ்டர் படத்தின் கதையை ஹிந்தி சினிமாவிற்கு ஏற்றவாறு சிறு சிறு மாற்றங்கள் செய்து கொண்டு வருமாறு கூறியுள்ளார்.

vijay-salman-khan-cinemapettai

vijay-salman-khan-cinemapettai

படக்குழுவினரும் அவர் கூறியவாறே கதையில் சில மாற்றங்களை செய்து அவரிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த கதையை முழுவதுமாக படித்த சல்மான்கான் இந்த கதையில் எனக்கு திருப்தி இல்லை எனவே நான் நடிக்க மாட்டேன் என கூறி படக்குழுவினரை திருப்பி அனுப்பிவிட்டாராம். இதனால் படக்குழுவினர் அதிருப்தியில் உள்ளனர். சல்மான்கானின் இந்த செயலால் விஜய் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் தங்களது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Continue Reading
To Top