வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

விஜய்க்கு ரெடியாகும் செகண்ட் பார்ட்.. ஷங்கர் படத்துக்கு பச்சைக்கொடி காட்டும் இளைய தளபதி

ஒரு வழியாக லியோ வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் விஜய்க்காக படம் கல்லாகட்டி வருகிறது. நஷ்டத்தில் இருந்து தாண்டி லாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த படத்தில் இருந்து விஜய் வெளியே வந்து விட்டார் அடுத்து வெங்கட் பிரபு படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

வெங்கட் பிரபு படத்திற்கு அடுத்ததாக அட்லி படத்தில் நடித்துவிட்டு அரசியலில் ஈடுபடுவார் என பல விதமான பேச்சுகள் விஜய் பற்றி தினந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆக மொத்தம் அரசியலில் ஈடுபட்டால் விஜய் சினிமாவில் நடிக்க மாட்டார் என்ற செய்தி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதற்கு இடையே விஜய், வெங்கட் பிரபு படத்திற்கு பிறகு மக்களுக்காக படம் செய்ய வேண்டும் அரசியல் கலந்து இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். அதனால் இதற்கு அடுத்து வரும் எல்லா படங்களுமே அரசியல் கலந்து தான் வருமாம். அட்லி இயக்கும் படத்தில் முழுசாக அரசியல் பேச போகிறாராம் விஜய்.

இதற்கிடையே இயக்குனர் சங்கருக்கு திடீரென விஜய் அழைப்பு விடுத்துள்ளாராம். தனக்கு நீங்கள் ஒரு அரசியல் சம்பந்தமான படம் பண்ண வேண்டும் அது ஆக்ஷனோடு இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறாராம். அது புதுவிதமான கதையாக இருந்தாலும் சரி இல்லை நீங்கள் இயக்கிய முதல்வன் படமாக இருந்தாலும் சரி எல்லாத்துக்கும் தயாராக இருக்கிறேன்.

இந்த படம் நான் அரசியலுக்கு கட்சி ஆரம்பிக்கும் சமயத்தில் படம் வெளியாக வேண்டும் அது உங்கள் படமாக தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் விஜய். பலமுறை சங்கர் விஜயுடன் முதல்வன் 2 படத்தை சேர்ந்து பண்ணலாம் என்று ஆசைப்பட்டார் அது நடக்கவில்லை தற்போது அதற்கான வேலை தானாகவே தேடி வந்திருக்கிறது. இருந்தாலும் சங்கர் இந்தியன் 2 முடிந்ததும் வேள்பாரி படத்தை எடுக்கலாம் என்று ஆர்வத்தில் இருந்து வருகிறார்.

விஜய் இப்படி உடனே கூப்பிட்டதும் சரி என்று தான் சொல்லி இருக்கிறாராம். ரொம்ப வருடம் படத்தை எடுக்காமல் படத்தை வேகமாக எடுத்து வெளியிட வேண்டும் என்று விஜய் முக்கியமாக கூறியிருக்கிறார். அதனால் வேள்பாரிக்கு முந்தைய ஒரு படம் இது மாதிரி ஒரு படத்தை பண்ணிவிடலாம் என்று முடிவில் சங்கர் வந்துவிட்டாராம். முதல்வன் 2 இவர்கள் கூட்டணியில் வெளிவந்தால் கண்டிப்பாக தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

- Advertisement -

Trending News