தரணி சொல்லாததையும் செய்த விஜய்.. மிஸ் பண்ணிட்டோம் என கதறிய மகேஷ்பாபு!

Vijay did what Dharani didn’t say in Ghilli movie: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய்.

இவரது ஆரம்பகால திரை வாழ்க்கை பல ஏற்ற இறக்கங்களை கொண்டதுதான். இப்படி தோல்விகளால் துவண்டு கொண்டிருந்த விஜய்க்கு திருப்பத்தை ஏற்படுத்தியதுதான் கில்லி.

தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்தது கில்லி. தெலுங்கில் வெளியான ஒக்கடு படம்தான் தமிழில் கில்லியாக ரீமேக் செய்யப்பட்டது. 

விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, மயில்சாமி, தாமு போன்ற முன்னணி நட்சத்திரங்களின் பங்களிப்பில் தரமான வெற்றி படமாக உருவாகியது கில்லி.

நாயகன், நாயகி, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என அனைவருக்கும் வரம்புக்கு மீறிய அழுத்தத்தை கொடுத்து ரசிகர்களின் நெஞ்சத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார் இயக்குனர்.

கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படம் என்பதால், படம் துவங்கும் முன்பு படத்திற்கான கதையை கூறியது மட்டுமல்லாமல், கபடி வீரர்களை முன்மாதிரியாக எடுத்து அவர்களது மேனரிஸங்களை உள்வாங்கி கொள்ளுங்கள் என்று ஒரு குறிப்பு மட்டுமே கொடுத்தார் இயக்குனர் தரணி.

இதனால் விஜய்யும் படம் துவங்குவதற்கு முன்பு சில கபடி விளையாட்டுகளை நேரில் சென்று கண்டு, வீரர்களின் மேனரிஸங்களை உள்வாங்கிக் கொண்டே நடித்தார்.

காதல், வீரம், நட்பு, கோபம், வன்மம், ஆக்ரோஷம் என அத்தனை வித உணர்வுகளையும் ஒரே கதையில் கொண்டு வந்து ரசிகர்களை கொள்ளை கொண்டு போனார் இயக்குனர் தரணி.

“அர்ஜுனரு வில்லு” என்ற பாடலின் மூலம் தளபதியின் ஒவ்வொரு அசைவுகளையும், ஹீரோசத்தையும் கொண்டாடி மகிழ்ந்தனர் ரசிகர்கள்.

விஜய் அளவிற்கு டெடிகேஷனோடு நடிக்கவில்லையே என வருத்தப்பட்ட மகேஷ் பாபு

படத்தை வெகுவாக ரசித்த ரசிகர்கள் தளபதியை கொண்டாடி தீர்த்தனர் என்றே சொல்லலாம். அதுமட்டுமின்றி கில்லி படத்தை பார்த்த மகேஷ்பாபுவும் விஜய்யை ஏகபோகமாக புகழ்ந்தார்

“விஜய் சூப்பராக நடித்து உள்ளார்” என்று மகேஷ்பாபுவே கூறி உள்ளார். மேலும் இப்படத்தை பார்த்து மகேஷ்பாபு, நாம விஜய் யை போன்று கதைக்கான டெடிகேஷன் உடன் வொர்க் பண்ணவில்லையே என்று வருத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இன்றும் 20 ஆண்டுகளுக்குப் பின்பு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி, வசூலில் சாதனை புரிந்து வருகிறது. எந்த ஒரு  நாயகனின் ரீ ரிலிஸ் படங்கள் செய்யாத சாதனையை செய்து வசூல் மன்னனாக வலம் வருகிறார் விஜய்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்