மாஃப்பியா கும்பலின் பிடியில் தெரிஞ்சே சிக்கிய விஜய்.. என்ன நடக்கப் போகிறது என்ற பயத்தில் எஸ்.ஏ.சி.!

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மைக் கிடைக்கும் இடங்களிலெல்லாம் வாயில் வருவதை உளறிவிட்டு சென்றுவிடுவார். இதன் காரணமாக பல சர்ச்சைகளில் அவர் சிக்கியது மட்டுமில்லாமல் விஜயையும் கோர்த்து விட்டுள்ளார். இதனால் விஜய் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பேசுசுவதையும், பார்ப்பதையும் முற்றிலுமாக தவிர்த்துவிட்டார். இதனால் தன்னை வளர்த்துவிட்ட தந்தையை விஜய் அவமானப்படுத்தி வருகிறார் என அவரை பலரும் வசைப்பாடினர்.

இது ஒரு பக்கம் இந்த சர்ச்சைகள் இருந்தாலும் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகனை எங்கும் விட்டுக்கொடுக்காமல் தனது மனைவியுடன் அண்மையில் வரும் பேட்டிகளில் கலந்துக்கொண்டு பேசி வருகிறார். இதனிடையே நடிகர் விஜய் தற்போது மிகப்பெரிய ஆபத்தில் இருப்பதாக எஸ்.ஏ சந்திரசேகர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Also Read: ஒரே காரியத்தை சாதிக்க 3 முதல்வரை சந்தித்த தளபதி விஜய்.. அரசியலை மிஞ்சின சூழ்ச்சி

நடிகர் விஜய் ஒரு வாட்சப் குரூப் ஒன்றில் புதிதாக சேர்ந்துள்ளாராம். அதில் விஜய்யுடன் சேர்ந்து 100 நபர்களுக்கு மேல் உள்ளார்களாம். அதில் தான் பேசிய எதோ ஒரு பேச்சை திரும்ப, திரும்ப தவறாக சித்தரித்து அந்த குரூப்பில் பரப்பபட்டு வருவதாக எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பொய்யை 10 முறை திரும்ப, திரும்ப சொன்னாலே உண்மையாகும் என்பார்கள்.

ஆனால் அந்த குரூப்பில் 100 முறை பரப்பப்பட்டு நான் சொல்லாத ஒன்று உண்மையாகவே மாறிவிட்டதாக எஸ்.ஏ. சந்திரசேகர் கவலையுடன் தெரிவித்துள்ளார். இதையெல்லாம் கண்டும் காணாததை போல் விஜய் அந்த குரூப்பில் எதுவும் பேசாமல் வருவதாகவும் , விஜய் ஒரு மாபியா கும்பலின் பிடியில் மாட்டிக்கொண்டுள்ளார் என்றும் கூறி வருகிறார் எஸ்.ஏ. சந்திரசேகர்.

Also Read: புதிய கீதை முதல் வாரிசு வரை.. தளபதி விஜய்யை பதம்பார்த்த 10 சம்பவங்கள்

மேலும் இந்த கும்பலில் இருந்து விஜய் எப்படி வெளியே வரப் போகிறார் என்பது தனக்கு தெரியவில்லை, நடப்பதையெல்லாம் பார்க்கும்போது தனக்கு பயமாக உள்ளதாக எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தற்போது நடிகர் விஜய், வாரிசு படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே வசூலை எடுக்க என்னவெல்லாம் செய்யலாம் என பிளான் போட்டு வருகிறார். இதற்கு நடுவில் மாஃபியா கும்பலின் பிடியில் விஜய் எப்படி மாட்டிக்கொள்ள முடியும் என பலரும் கேள்விக்கேட்டு வருகின்றனர்.

மகனுடன் எப்படியாவது மீண்டும் இணைந்து விட வேண்டும் என எஸ்.ஏ. சந்திரசேகர் துடித்து வருவது அவரது பேட்டிகளில் அவர் பேசும்போதே தெரியும் . இதனிடையே மாஃபியா கும்பல், விஜய்க்கு ஆபத்து என கூறி விஜய்யுடன் ஒன்று சேர்ந்து விடலாம் என பிளான் செய்து வருவதாக சிலர் கூறி வந்தாலும், ஒருவேளை அவர் கூறியது உண்மையாக இருக்க கூட அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு வருகின்றனர். மாஃபியா கும்பலில் சிக்கியுள்ள தளபதி, எஸ்.ஏ. சந்திரசேகரின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை.

Also Read: தளபதி விஜய் பெயரை கெடுத்த 7 படங்கள்.. அப்பாவும் இதற்கு உடந்தையா!

- Advertisement -spot_img

Trending News