விஜய், ஷியாம் நண்பர்களை கழட்டி விட்ட சினிமா.. சந்திக்க கூடாதுன்னு மறுத்த தளபதி

Vijay and Shyam friends in the cinema : கலைஞர்கள் பலரும் திரை துறையில்  நுழைந்து முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் கனவுடன் வருகின்றனர்.

ஆனால் அவர்களின் கனவுகள் பலவும் நொறுங்கி சின்னா பின்னம் ஆகிவிடுகிறது. ஒரு சில வாய்ப்புகளுக்கு பின் திரை திரையிலிருந்து காணாமல் போகும் அவலமும் நிகழத்தான் செய்கிறது.

அவ்வாறு சில நடிகர்கள் விஜய் மற்றும் ஷியாம் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் நண்பர்களாக நடித்து சில படங்களுக்குப் பின் திரை  துறையில் இருந்து ஒதுங்கி விட்டனர். அவர்களில் சிலர் இதோ,

பக்ரு: டிஷ்யூம், ஏழாம் அறிவு போன்ற படங்களில் ஜீவா மற்றும் சூர்யாவிற்கு நண்பராக நடித்த பக்ரு மலையாளத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக தகவல் 

ராம்ஜி: வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்காய் என்று பாடலின் மூலம் தமிழகமெங்கும் பட்டி தொட்டிகளில்  பிரபலமானவர் ராம்ஜி. 

அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர நடிகராகவும் வில்லன் கேரக்டர்களிலும் நடித்தவர் தான் ராம்ஜி. 

தற்போது சினிமாவில் பட வாய்ப்பு குறைந்து போகவே சின்னத்திரையில் தோன்ற ஆரம்பித்தார். 

தளபதி சந்திக்க மறுத்த நண்பர்

மனிஷ்: குஷி, மின்னலே மற்றும் 12B போன்ற படங்களில் நாயகனுக்கு நண்பனாக நடித்தவர் தான் இந்த மனிஷ். 

அன்றைய காலகட்டங்களில் மட்டும் சில படங்களில் நடித்து விட்டுப் போனவர் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு ஒதுங்கினார். ஒரு கட்டத்தில் தளபதி சந்திக்கக் கூடாதுன்னு இவரை மறுத்ததாகவும் தகவல்.

மனிஷ், பக்ரு மற்றும் சசிகுமார் சுப்பிரமணியம்

சசிகுமார் சுப்பிரமணியம்: கன்னத்தில் முத்தமிட்டால், ஷாஜகான், ஜேஜே போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் தான் சசிகுமார் சுப்பிரமணியன்.  பல படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்திய போதும் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் வாய்ப்பு இல்லாமலே போனது.

சீரியல்களில் அதிகமாக தலைகாட்டிய சசிகுமார், தற்போது  சில படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதி வருவதாகவும், நண்பரால் ஏமாற்றப்பட்டதாகவும் பேட்டி ஒன்றில் புலம்பி உள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்