வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஷூட்டிங் ஸ்பாட்டை விட காதலியிடம் கராராக இருந்த வெற்றிமாறன்.. 8 வருடம் காக்க வைத்த சம்பவம்

கோலிவுட்டின் வெற்றி இயக்குனராகவே பார்க்கப்படும் இயக்குனர் வெற்றிமாறன், 2007 ஆம் ஆண்டு தனுஷை வைத்து பொல்லாதவன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு ஆடுகளம் என்ற படத்தை இயக்கி 6 தேசிய விருதை தட்டி தூக்கினார்.

பின்பு வடசென்னை, அசுரன் தற்போது வெளியாகியிருக்கும் விடுதலை போன்ற படங்களை இயக்கி தொடர் வெற்றிகளை ருசித்துக் கொண்டிருக்கிறார். இவர்  ஷூட்டிங் ஸ்பாட்டில் கராராக இருப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் தன்னுடைய காதலியிடமும் அவ்வாறே நடந்து கொண்டிருக்கிறார்.

Also Read: இந்த மனுஷன் எப்படி தான் நடிக்கிறார்.. சூரியை வியந்து பார்க்க வைத்த பிரபலம்

அதுவும் எட்டு வருடங்களாக காக்க வைத்த சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. வெற்றிமாறன், ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூந்தென்றல் என்ற ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் வெற்றிமாறனின் மனைவி ஆர்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் தங்களுடைய காதல் கதையை வெளிப்படையாக பேசி உள்ளார்.

சென்னையில் உள்ள ஒரு தேநீர் கடையில் தான் வெற்றிமாறனை சந்தித்தாராம். ஆனால் வெற்றிமாறன் கொஞ்சம் கூட ஆர்த்தியை கண்டு கொள்ளவில்லை. சில நாட்களில் வெற்றிமாறனை ஆர்த்திக்கு பிடித்துப் போனதால், முதல் முதலாக தன் காதலை அவரிடம் சொல்லி இருக்கிறார். அதற்கு வெற்றிமாறன், திருமணம் செய்து கொள்ள விரும்பினால் 10 வருடம் நீங்கள் காத்திருக்க வேண்டும்.

Also Read: 10 நாட்களில் விடுதலை படத்தின் மொத்த வசூல்.. பாக்ஸ் ஆபிஸில் செய்த சாதனை

அப்படி இருந்தால் சரி என்று கராராக சொல்லிவிட்டாராம். அதற்கு ஆர்த்தியும் ஒத்துக் கொண்டாராம். ஆனால் வெற்றிமாறன் சொன்னது போல் 10 வருடங்கள் ஆகாது, ஓரிரண்டு வருடத்திற்குள்ளேயே அவர்களது திருமணம் நடந்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்திருக்கிறார். ஆனால் வெற்றிமாறன் சொன்னது போல் இவர்களது திருமணம் நடக்க 8 வருடங்கள் ஆனதாம்.

இதற்கிடையில் திடீரென்று மனசு மாறினால் நீ வேறு ஒருவரை திருமணம் செய்து கொள். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அந்த சமயம் ஆர்த்திக்கு ஹைதராபாத்தில் வேலை கிடைத்தது. என்னால் அவரை விட்டு பிரிய முடியாது வேலைக்குப் போக மாட்டேன் என்றும் சொன்னாராம்.

Also Read: சூரியிடம் மொத்தமா சுருட்டிய ஹீரோ.. ஆண்டவன் மேல பாரத்தை போட்டு பல மடங்கு திருப்பி எடுத்த குமரேசன்

அதற்கு அவர் உன்னுடைய கனவையும் என்னுடைய கனவையும் இந்த காதல் கலைப்பதாக இருந்தால், நாம் காதலிப்பதை நிறுத்திக் கொள்ளலாம் என்றும் சொல்லிவிட்டார். உடனே அந்த வேலையில் ஆர்த்தி சேர்ந்தது மட்டுமின்றி, இப்போது அந்த கம்பெனியில் ஜெனரல் மேனேஜராகவும் இருக்கிறாராம். இவ்வாறு திரையுலகில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் வெற்றிமாறன் ஸ்டிட் ஆக இருக்கக்கூடிய மனிதன் என்பது அவருடைய காதல் கதையை தெரிந்த பின் பலரும் புரிந்து கொண்டனர். 

- Advertisement -

Trending News