Tamil Cinema News | சினிமா செய்திகள்
நாலா பக்கமும் வெற்றிமாறனுக்கு வரும் குடைச்சல்.. லீக்கான விடுதலை 2 கிளைமாக்ஸ் சம்பவம்
விடுதலை 2 படத்தால் வெற்றிமாறனுக்கு வந்த குடைச்சல்.

Vetrimaaran-Viduthalai 2: எனக்குன்னு எங்கிருந்து தான் வராங்களோ, இதுதான் இப்போது வெற்றி மாறனின் மைண்ட் வாய்ஸாக இருக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் இப்போது நடந்திருக்கிறது. அவருடைய இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த விடுதலை 1 நல்ல விமர்சனங்களை பெற்றது.
அதைத்தொடர்ந்து இப்போது இரண்டாம் பாகத்துக்கான வேலைகளில் அவர் பிசியாக இருக்கிறார். ஏற்கனவே இதன் ஷூட்டிங் முடிவடைந்திருந்தாலும் தனக்கு திருப்தி இல்லாத காட்சிகளை அவர் மீண்டும் படமாக்கி வருகிறார். அதில் சூரி தனக்கான காட்சிகளை முடித்துக் கொடுத்த நிலையில் அடுத்தது விஜய் சேதுபதி எப்போது வருவார் என்று படகுழு மொத்தமும் தவம் கிடைக்கிறது.
இந்த சூழலில் விடுதலை 2 படத்தின் கிளைமாக்ஸ் இதுதான் என்ற ஒரு செய்தி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது முதல் பாகத்தில் சூரி தன் காதலியை காப்பாற்றுவதற்காக விஜய் சேதுபதியை பிடித்து கொடுப்பார். அதைத்தொடர்ந்து பெருமாள் வாத்தியார் யார் என்பதை தெரிந்து கொண்டு சூரி அவருக்கு ஆதரவாக இருப்பது போன்று காட்டப்பட்டிருந்தது.
தற்போது இரண்டாம் பாகத்தில் வாத்தியாரான விஜய் சேதுபதியை சூரி சுட வேண்டும் என போலீஸ் தரப்பில் இருந்து கட்டளை வருகிறது. ஆனால் அவர் அதற்கு முடியாது என்று மறுத்ததால் வேறு ஒரு அதிகாரி வாத்தியாரை சுட்டு விடுவாராம்.
இதனால் கோபமடையும் சூரி போலீசை கொன்றுவிட்டு காட்டுக்குள் செல்வது போலவும், அதன் பிறகு அவரே பெருமாள் வாத்தியாராக மாறி மக்களை காப்பது போலவும் எடுக்கப்பட்டிருக்கிறதாம். இதுதான் விடுதலை 2 படத்தின் கதை என கூறப்படுகிறது.
இப்படி ஒரு விஷயம் லீக் ஆனதில் வெற்றிமாறன் கொஞ்சம் ஜெர்க் ஆனாலும் பாத்துக்கலாம் என்று தன் வேலையில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறாராம். அந்த வகையில் நாலா பக்கத்தில் இருந்தும் அவருக்கு குடைச்சல் வந்தாலும் இப்படத்தை ரசிகர்களுக்கு புது அனுபவமாக கொடுப்பதில் தான் அவர் இப்போது தீவிரம் காட்டி வருகிறார்.
