சமந்தாவை போல் வனிதாவுக்கு இருக்கும் விசித்திர நோய்.. அவரே வெளியிட்ட சீக்ரெட்

வெற்றி நாயகியாக இருக்கும் சமந்தா கடந்த சில மாதங்களாகவே மையோசிடிஸ் என்னும் பிரச்சனையால் கடுமையாக பாதிப்படைந்தார். அதற்காக அவர் நடிப்பதை கூட ஓரம் கட்டி விட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அதன் பிறகு ஓரளவு உடல்நலம் தேறிய சமந்தா இப்போது நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

இருப்பினும் அந்த பிரச்சனைக்காக அவர் அவ்வப்போது சிகிச்சை எடுத்துக் கொண்டு தான் வருகிறார். இந்நிலையில் அவரைப் போன்றே தனக்கும் ஒரு விசித்திரமான பிரச்சனை இருப்பதாக நடிகை வனிதா தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் இப்போது நடிப்பிலும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

Also read: மரண வேதனையை அனுபவிக்கும் சமந்தா.. வெளியான ஐஸ் பாத் டிரீட்மென்ட் புகைப்படம்

அந்த வகையில் இவர் சமீபத்தில் தன்னுடைய லுக்கை மாற்றி வெளியிட்ட போட்டோ ஒன்று சோசியல் மீடியாவையே அதிர வைத்தது. இந்த சூழ்நிலையில் அவர் தனக்கு கிளாஸ்ட்ரோஃபோபியா என்ற பிரச்சனை இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த பாதிப்பு இருப்பவர்கள் சிறிய அல்லது அடைத்தது போன்ற இடங்களில் இருப்பதற்கு பயப்படுவார்கள்.

இப்படி ஒரு பிரச்சனை தான் வனிதாவுக்கும் இருக்கிறதாம். இந்த சீக்ரெட்டை இப்போது வெளியிட்டுள்ள அவர் தனக்கு நெருக்கமான குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இது பற்றி தெரியும் என்றும் கூறியுள்ளார். அந்த வகையில் லிப்ட், பாத்ரூம் போன்ற இடங்களில் தன்னால் அதிக நேரம் இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also read: புருஷன் செத்து 3 நாள் கூட ஆகல.. எக்ஸ் காதலுடன் புகைப்படம் வெளியிட்டு வாழ்க்கையை புதுப்பிக்கும் வனிதா

படப்பிடிப்பு தளத்தில் கூட கேரவனில் இருக்கும் பாத்ரூமை பயன்படுத்த மாட்டேன் என்றும் உடனடியாக டிரஸ் மாற்றிக்கொண்டு வந்துவிடுவேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது கூட இந்த பிரச்சனை தனக்கு மிகவும் சவாலாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.

இது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. மீடியாவில் அசால்ட்டு ராணியாக கெத்து காட்டி வரும் இவருக்கு இப்படி ஒரு பயம் இருப்பது வியப்பாகத் தான் இருக்கிறது. அந்த வகையில் வனிதா வெளியிட்டுள்ள இந்த ரகசியம் இப்போது மீடியாவில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் ரசிகர்களும் இது குறித்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Also read: வனிதாவின் எக்ஸ் கணவர் உயிரிழப்பு.. காரணம் கேட்டு அதிர்ச்சியில் திரையுலகம்