எங்கு போனாலும் கேப்டனின் பேச்சு தான்.. ஹிந்தி நடிகருக்கு முதல் வாய்ப்பை கொடுத்த விஜயகாந்த்

Actor vijaykanth: விஜயகாந்த் நல்ல நடிகர் என்பதை தாண்டியும் எத்தகைய மனிதர் என்பது இந்த உலகம் அறிந்த விஷயம் தான். தமிழ் சினிமாவில் அவரால் எண்ணற்ற நடிகர்கள் வாய்ப்பு பெற்று இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவின் முக்கிய இடமும் விஜயகாந்துக்கு இருக்கிறது.

அதாவது நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து பலருக்கு நன்மைகள் செய்திருக்கிறார். அதுவும் விஜயகாந்த் இருந்த காலம் பொற்காலம் என்று சினிமா பிரபலங்கள் இப்போதும் கூறி வருகிறார்கள். மேலும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போதும் எல்லோரும் சாப்பிடும் உணவை தான் விஜயகாந்த் சாப்பிடுவாராம்.

Also read: 53 வயது வரை சிங்கிளாகவே இருக்கும் விஜயகாந்த், ரஜினி பட நடிகை.. மாப்பிள்ளை தேடும் குடும்பம்

அதுமட்டுமின்றி தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களிடம் தன்னால் முடிந்த உதவியை செய்யக்கூடியவர். ஆனால் இவ்வளவு நன்மை செய்த விஜயகாந்த் இப்போது உடல் நல பிரச்சனையால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

ஆனால் இவரது புகழ் பாலிவுட் வரை சென்றுள்ளது எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது பிரபல பாலிவுட் நடிகர் விஜயகாந்த் தான் தனக்கு தமிழ் சினிமாவில் முதலில் வாய்ப்பு கொடுத்தார் என பெருமிதமாக பேசி இருந்தார். அதாவது அருந்ததி படத்தின் மூலம் ரசிகர்களை அலற விட்டவர் சோனு சூட்.

Also read: ஏக்கத்துடன் இருந்த வடிவேலுவை தூக்கி விட்ட விஜயகாந்த்.. நன்றியை மறந்து அசிங்கப்படுத்திய கொடுமை

இவருக்கு தமிழ் சினிமாவில் முதல் முதலில் தான் நடித்த கள்ளழகர் படத்தின் மூலம் விஜயகாந்த் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதன் பிறகு தான் தமிழ் சினிமாவில் அவருக்கு நிறைய படங்கள் கிடைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி பாலிவுட்டிலும் முக்கிய நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார்.

இது குறித்து சமீபத்தில் பேசிய சோனு சூட் விஜயகாந்த் தான் தனக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது என்றும், எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் என்று கூறியிருந்தார். இவ்வாறு தமிழ் சினிமாவை தாண்டி எங்கு போனாலும் விஜயகாந்தின் புகழ் பறந்து விரிந்து கிடக்கிறது.

Also read: விஜயகாந்த் பெயர் சொன்னதால் வாய்ப்பு தர மறுத்த வடிவேலு.. தூக்கிப் போட்டு மிதித்து இருப்பேன்!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்