தலையாட்டி பொம்மையாய் மாறிய விஜயகாந்த்.. பாலகிருஷ்ணா போல் தமாஷ் ஹீரோவாக மாறிய கேப்டன்

Actor Vijayakanth: அந்த மனுஷன் மாதிரி யாரும் இருக்க முடியாது என்று திரும்பும் பக்கம் எல்லாம் தன்னை பற்றி நல்லதை மட்டுமே பேச வைக்கும் ஒரே ஹீரோ விஜயகாந்த் மட்டும் தான். இவரைப் பற்றி எத்தனையோ நல்ல விஷயங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதே அளவுக்கு அதிக ட்ரோல் செய்யப்பட்ட ஹீரோவும் இவர் தான்.

சுருக்கமாக சொல்லப்போனால் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் பட காட்சிகள் சோசியல் மீடியாவில் அளவுக்கு அதிகமாக கலாய்க்கப்படும். அதேபோல ஒரு நிலை தான் விஜயகாந்துக்கும் இருந்தது. சில படங்களில் அவருடைய சண்டை காட்சிகள் எதார்த்தத்திற்கு மீறியதாக இருக்கும்.

Also read: விஜயகாந்த் மிஸ் செய்த 2 படங்கள்.. லேடி சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட முடியாத கேப்டன்

இப்படி அவர் தமாஷ் ஹீரோவாக மாற்றப்பட்டதற்கு பின்னால் மிகப்பெரும் சதி வலை இருக்கிறது. அதாவது விஜயகாந்துக்கு எல்லாமும் ஆக இருந்து அவரை வளர்த்து விட்டவர் அவருடைய நண்பர் ராவுத்தர் தான். ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு இந்த இரு நண்பர்களின் நட்பில் பிளவு ஏற்பட்டது.

இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் விஜயகாந்தின் மனைவி தான் முக்கிய காரணம் என்பது பலருக்கும் தெரியும். அதாவது ராவுத்தர் விஜயகாந்தின் பட சம்பந்தப்பட்ட வேலைகளை பார்த்து வந்த சமயத்தில் ஒரு தயாரிப்பாளர் சம்பள பாக்கி வைத்திருக்கிறார். அதை ராவுத்தர் கேட்டது தான் பிரச்சனைக்கு மூல காரணமாக இருந்திருக்கிறது.

Also read: எங்கு போனாலும் கேப்டனின் பேச்சு தான்.. ஹிந்தி நடிகருக்கு முதல் வாய்ப்பை கொடுத்த விஜயகாந்த்

அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் விஜயகாந்தின் மனைவியிடம் தூபம் போட நண்பர்களின் நட்பில் விரிசல் விழுந்தது. அதன் பிறகு மொத்த கண்ட்ரோலையும் தன்னுடைய கையில் எடுத்துக் கொண்ட பிரேமலதா தன் சகோதரரை பொறுப்பில் அமர்த்தினார்.

அதன் பிறகு தான் விஜயகாந்தின் படங்களில் நம்ப முடியாத பல காட்சிகள் இடம் பெற்றது. அதிலும் ஓவர் ஹீரோயிசம் அவரை கலாய்க்கும் அளவுக்கு கொண்டு சென்றது. இதற்கு முக்கிய காரணம் ராவுத்தர் மேல் இருந்த வன்மம் தான். அந்த நட்பு பிரிந்ததாலேயே விஜயகாந்த் மனதளவில் உடைந்து போய் வேறு வழியில்லாமல் மனைவிக்கு தலையாட்டி பொம்மையாய் மாறும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

Also read: 53 வயது வரை சிங்கிளாகவே இருக்கும் விஜயகாந்த், ரஜினி பட நடிகை.. மாப்பிள்ளை தேடும் குடும்பம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்