விஜயகாந்த் மிஸ் செய்த 2 படங்கள்.. லேடி சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட முடியாத கேப்டன்

Actor Vijayakanth: ரஜினி, கமல் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே தனக்கென ஒரு தனி ரசிகர்கள் வட்டத்தோடு சைலன்டாக முன்னேறியவர் தான் விஜயகாந்த். அதன் பிறகு சினிமாவில் அவர் அடையாத உயரங்களே கிடையாது. அப்படிப்பட்ட கேப்டன் லேடி சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட முடியாமல் இருந்திருக்கிறார்.

விஜயகாந்த் ஆரம்பத்தில் நடிக்க வந்த சமயத்தில் இவருடன் நடிக்க மறுத்த பல நடிகைகள் இருக்கின்றனர். அதற்கு காரணம் இவர் கருப்பாக இருப்பது தான். அது மட்டுமல்லாமல் பார்ப்பதற்கு நாட்டுப்புறத்தான் மாதிரி இருக்கிறார் என்ற காரணங்களை சொல்லியே நதியா போன்ற பல நடிகைகள் வாய்ப்புகளை தட்டி கழித்திருக்கின்றனர்.

Also read: எங்கு போனாலும் கேப்டனின் பேச்சு தான்.. ஹிந்தி நடிகருக்கு முதல் வாய்ப்பை கொடுத்த விஜயகாந்த்

இதனால் சுதாரித்துக் கொண்ட விஜயகாந்த் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி அதன் வழியில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு தான் இவருடன் நடிக்க மறுத்த நடிகைகள் இவர் பட வாய்ப்பை ஏற்க ஆரம்பித்திருக்கின்றனர். மேலும் அவருடன் இணைந்து நடிக்க மாட்டோமா என்று ஏங்கிய நடிகைகளும் இருக்கிறார்கள்.

இப்படி தன் திறமையால் வளர்ந்த விஜயகாந்த் இரண்டு படங்களை சில காரணங்களால் மிஸ் செய்திருக்கிறார். அந்த வகையில் மனித தர்மம் என்ற படத்தில் விஜயகாந்த் பானுப்பிரியாவுடன் இணைந்து நடித்தார். ஆனால் பாதி படம் முடிந்த பிறகு சில பிரச்சனைகளால் அது நிறுத்தப்பட்டிருக்கிறது.

Also read: 53 வயது வரை சிங்கிளாகவே இருக்கும் விஜயகாந்த், ரஜினி பட நடிகை.. மாப்பிள்ளை தேடும் குடும்பம்

ஆனால் அதன் பிறகு இவர்கள் இருவரும் காவியத்தலைவன் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அதைத்தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் ஆக விளங்கிய விஜயசாந்தியுடனும் இவர் நடிக்க இருந்தார். ராஜா ராணி என பெயரிடப்பட்டிருந்த அப்படமும் சில காரணங்களால் நிறுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் இவர்கள் இருவரும் நெஞ்சில் துணிவிருந்தால் என்ற படத்தில் நடித்திருக்கிறார்கள்.

அதாவது விஜயசாந்தி நடிக்க வந்த ஆரம்ப கட்டத்தில் இந்த படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் விஜயகாந்துக்கு ஜோடியாக அவர் நடிக்கவில்லை. அதன் பிறகு தெலுங்கில் இவர் முன்னணி அந்தஸ்தை அடைந்த போது தான் விஜயகாந்த் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. இவ்வாறு இந்த 2 படங்களையும் மிஸ் செய்ததை நினைத்து கேப்டன் ரொம்பவும் வருத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: ஏக்கத்துடன் இருந்த வடிவேலுவை தூக்கி விட்ட விஜயகாந்த்.. நன்றியை மறந்து அசிங்கப்படுத்திய கொடுமை

Next Story

- Advertisement -