உதயநிதியை தலையில் துண்டை போட வைத்த 5 படங்கள்.. நயன்தாரா, நண்பனை நம்பி மூக்குடைந்த சோகம்

இன்றைய கோலிவுட் சினிமாவை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தன்னுடைய கைவசம் வைத்திருக்கிறது என்று எல்லோருமே சொல்லி கொண்டு இருக்கிறார்கள். அதற்கேற்றாற் போல் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கும் அத்தனை படங்களும் கோடிக்கணக்கில் வசூலித்து வருகின்றன. ஆனால் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தையும் தலையில் துண்டு போட வைத்த படங்களும் இருக்கின்றன.

காத்துவாக்குல 2 காதல்: இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் காத்துவாக்குல 2 காதல் தான். அதற்கு காரணம் நயன்தாரா, சமந்தா என்ற 2 டாப் ஹீரோயின்கள் ஒரு படத்தில் இணைந்தது தான். நயன்தாராவை நம்பி இந்த படத்தை உதயநிதி வாங்கினார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

Also Read: காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்.. ரகசியமாக வெளிவந்த உண்மை

பீஸ்ட்: தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த தமிழ் புத்தாண்டு அன்று ரிலீஸ் ஆன திரைப்படம் பீஸ்ட். டாக்டர் பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய படம் என்பதால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவனும் நடித்திருந்தார். இருந்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

குலு குலு: மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் குலு குலு. இந்த படத்தில் நடிகர் சந்தானம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வழக்கமான சந்தானத்தின் நகைச்சுவை களம் இல்லாது கொஞ்சம் சீரியஸாகவே படம் நகர்ந்தது. இருந்தாலும் படம் தோல்வியடைந்தது.

Also Read: வேறுவழியில்லாமல் துவண்டு போன சந்தானம் செய்யும் வேலை.. மேடையிலேயே வெளியான தகவல்

கேப்டன்: ஆர்யா, சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்த திரைப்படம் கேப்டன். இந்த படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியிருந்தார். இந்த படத்தை ஆர்யாவை நம்பி நட்புக்காக படமே பார்க்காமல் வாங்கியதாகவும், கடைசியில் படம், அடித்த போஸ்டர் காசை கூட கலெக்சன் செய்யவில்லை என்றும் உதயநிதியே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

காபி வித் காதல்: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்த திரைப்படம் காபி வித் காதல். வழக்கமான சுந்தர் சி யின் வெற்றி படங்களை போல் இருக்கும் என நம்பிய ரசிகர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

Also Read: சுந்தர் சி-யின் பட வசூலுக்கு ஆப்படித்த இளம் இயக்குனர்.. கவனிக்கப்படாமல் போன காபி வித் காதல்

Next Story

- Advertisement -