புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய த்ரிஷா.. குருவி ஒக்கார பனம்பழம் விழுந்த கதையாய் ஏறிய மார்க்கெட்

Trisha – Nayanthara: அவனவன் எடுக்குற முடிவு எல்லாம் நமக்கு சாதகமாகுது என்று வடிவேலு சொல்வது போல் நயன்தாரா கல்யாணம் பண்ணியது த்ரிஷாவுக்கு யோகமாக மாறிவிட்டது. தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் போட்டி என்பது நயன்தாராவுக்கும், த்ரிஷாவுக்கும் தான் என்று ஆகிவிட்டது. சில வருடங்களுக்கு முன் கொடி கட்டி பறந்த த்ரிஷாவின் மார்க்கெட் நயன்தாரா என்ட்ரியால் பறிபோனது என்பது எல்லோருக்கும் தெரியும்.

அதற்கு முன்பு வரை முன்னணி ஹீரோக்களுக்கு கதாநாயகி என்றாலே அது த்ரிஷா தான் என்பது மொத்தமாய் தலைகீழாய் மாறி அஜித், விஜய் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார் நயன்தாரா. அதன்பின்னர் அவர் தனி கதாநாயகியாக நடிக்கும் படங்கள் ஹிட் அடிப்பதை பார்த்து, த்ரிஷாவும் அந்த முயற்சியில் இறங்கி முகத்தில் கரியை பூசினது தான் மிச்சம்.

Also Read:ஒரே வாரத்தில் ஒய்ந்து போய் தட்டு தடுமாறும் ஜவான்.. 8 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் ரிப்போர்ட்

மொத்தமாய் மார்க்கெட் இழந்து பட வாய்ப்புகள் இல்லாமல் த்ரிஷா இருந்த நேரத்தில், நயன்தாரா கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். அதே நேரத்தில் த்ரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. ஓவர் நைட்டில் ஒபாமா ஆன கதையாய் இந்த ஒரு படம் 10 வருடங்களாக விழுந்து கிடந்த மார்க்கெட்டை ஒரேடியாக உச்சாணிக்கொம்பில் ஏற்றி விட்டது.

நயன்தாராவும் ஜவான் படத்தை நம்பி இனி பாலிவுட்டில் கால் பதித்து விடலாம் என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டு தமிழ் சினிமாவின் பக்கம் திரும்பாமல் இருந்தார். குருவி ஒக்கார பனம்பழம் விழுந்த கதையாய் இந்த காலி இடத்தில் மொத்தமாய் ஸ்கோர் செய்துவிட்டார் குந்தவை. பல வருடங்களுக்கு பிறகு தளபதி விஜய்யுடன் லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Also Read:நயன்தாரா மார்க்கெட்டை வேறலெவலுக்கு கொண்டு போன 7 படங்கள்.. தெறிக்கவிட்ட பில்லா சாஷா

இப்போது தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயின் ஆக த்ரிஷா இடம் பிடித்து விட்டார். மணிரத்தினம் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் படத்தில் த்ரிஷா தான் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்காக அவர் வாங்கி இருக்கும் சம்பளம் 12 கோடி ஆகும். இது நயன்தாராவின் சம்பளத்தை விட அதிகம்.

நயன்தாரா நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன ஜவான் படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் 11 கோடியாகும். அதைவிட ஒரு கோடி அதிகமாக இப்போது த்ரிஷா வாங்கி இருக்கிறார். இனி போகப் போக த்ரிஷாவின் சம்பளம் ஏறிக்கொண்டே தான் போகும். பத்து வருடமாக அவர் எதற்காக காத்திருந்தாரோ அது நடந்து விட்டது.

Also Read:2வது திருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா.. நாசுக்காக பதிலளித்த சமந்தா

- Advertisement -

Trending News