நயன்தாரா மார்க்கெட்டை வேறலெவலுக்கு கொண்டு போன 7 படங்கள்.. தெறிக்கவிட்ட பில்லா சாஷா

Nayanthara: பொதுவாகவே சினிமாவில் மார்க்கெட் என்பது நடிகைகளுக்கு ரொம்பவே முக்கியம், அதிலும் குறைந்தபட்சம் 3 முதல் 8 வருடங்களுக்குள்ளவே ஹீரோயின்களின் கதை முடிந்து விடும். யாராவது ஒருவருக்கு மட்டுமே அதிர்ஷ்டம் இருக்கும். அதுபோல நம்ம லேடி சூப்பர் ஸ்டார்னு சொல்லுற அளவுக்கு சினிமாவை ஆதிக்கம் செய்யும் நயன்தாராவின், மார்க்கெட்டை வேற லெவல் ஆக கொண்டு போன 7 படங்களை பற்றி பார்க்கலாம்.

ராஜாராணி: இயக்குனர் அட்லீ இயக்கத்தில் 2013 இல் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் ரெஜினாவாக நடித்துள்ளார். காதல் தோல்வி ஆகி அதிலிருந்து வெளியே வர முடியாமலும், வேறொரு வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள முடியாமலும் தவித்துக் கொண்டிருக்கும் ஹீரோயின் ஆக நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் வரும் அழுகை காட்சிகளிலும், நக்கல் அடிக்கும் காட்சிகளிலும் பயங்கரமாக நடித்து தெறிக்க விட்டிருப்பார்.

மாயா: ஆரி அர்ஜுனன் கூட்டணியில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் வெளியான படம் மாயா. திரைப்படத்தில் பயங்கர சாந்தமாக நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் ஹாலிவுட்டில் வருவது போல திகில் காட்சிகள் இடம்பெற்று இருக்கும்.

Also Read: ரியல் கேங்ஸ்டர் லுக்கில் அலப்பறையுடன் வெளிவந்த தலைவர் 171 போஸ்டர்.. இணையத்தில் காட்டுத் தீயாய் பரவும் டைட்டில்

நானும் ரவுடிதான்: இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கூட்டணியில் வெளிவந்த நானும் ரவுடிதான் படத்திலும், தனது நடிப்பினால் பிச்சு உதறி இருப்பார். காது கேட்காத பெண் தனது அப்பாவுக்காக ரிவெஞ் எடுப்பது போல் கதை இருக்கும். இத்திரைப்படத்தில் என்னதான் விஜய் சேதுபதி இருந்தாலும் கதை முழுக்க இவரை சுற்றி தான் இருக்கும். குறிப்பாக இதில் இவரின் உடைகள் எல்லாம் பார்க்கவே கியூட் ஆக இருக்கும்.

கோலமாவு கோகிலா: இக்கட்டான சூழ்நிலையில் உள்ள குடும்பத்தை காப்பாற்ற, போதைப் பொருட்கள் கடத்தும் நடுத்தர குடும்ப பெண்ணாக கோலமாவு கோகிலாவில் நடித்திருப்பார். எப்பதுமே கண்ணில் பயத்தோடும், மாட்டிக்கொண்டால் எஸ்கேப் ஆகும் விதமும் பயங்கரமாக இருக்கும். ஒரு பக்கம் சாதுவாகவும், மறுபக்கம் க்ரைம் செய்பவராகவும் துணிச்சலுடன் நடித்திருப்பார்.

Also Read:பிக் பாஸ் வருகையால் ஊத்தி மூடும் ரியாலிட்டி ஷோ.. டிஆர்பி இல்லாததால் விஜய் டிவி எடுத்த முடிவு

முக்குத்தி அம்மன்: மூடநம்பிக்கைகள் மூலம் போலிச் சாமியார்கள் எப்படி ஊரை ஏமாற்றுகிறார்கள் என்பதை மூக்குத்தி அம்மன் மூலம் தெளிவாக காட்டியிருப்பார்கள். இதில் அம்மனாக வந்து வரம் கொடுக்கும் போது சாப்டாகவும் , ஆர் ஜே பாலாஜியை காப்பாற்றும் போதும் டெரராகவும் நேர்த்தியாக நடித்திருப்பார். தனக்கே உண்டான தனி ஸ்டைலில் பண்ணி இருப்பார்.

அறம்: கோபி நைனர் இயக்கத்தில் 2017 வெளியான அறம்,அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனையை வெளிக்கொண்டு வந்தது. குறிப்பாக ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் விளைவுகளை அப்பட்டமாக சொன்ன திரைப்படம். இதில் கலெக்டராக பொறுப்பாக நடந்து கொள்ளும் நேர்மையான அதிகாரியாகவும் நடித்திருப்பார்.

Also Read: யாரும் வாங்கல, தியேட்டரிலும் மதிக்கல முடங்கி கிடந்த விஜய் சேதுபதியின் 5 படங்கள்.. ரூட்டை மாத்திய மக்கள் செல்வன்

பில்லா: விஷ்ணுவரதன் இயக்கத்தில் அஜித் குமார் கூட்டணியில் 2007 இல் வெளியான பில்லா, வாழ்க்கையை புரட்டி போட்ட ஒரு திரைப்படமாகும். ஹாலிவுட் திரைப்படங்களில் வருவது போல வரும் காட்சிகளில் அசர வைக்கும் அளவிற்கு நடித்து இருப்பார். சாஷாவாகா தேவைப்படும் அளவிற்கு மாஸ், கிளாஸ் பெர்ஃபார்மன்ஸ் கொடுத்து அதிர வைத்திருப்பார்.

- Advertisement -