ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

2023ல் அதிரடியாக நிறுத்தப்பட்ட சீரியல்களின் லிஸ்ட்.. சமையலம்மாவிற்கு எண்டு கார்டு போட்ட விஜய் டிவி

2023 Top Serials Stopped Suddenly: இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை இப்போதெல்லாம் சீரியல்களை விரும்பி பார்த்து பொழுதை கழிக்கின்றனர். அதிலும் இந்த மாதத்துடன் 2023 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு துவங்கப் போகிறது. இருப்பினும் இந்த வருடத்தில் அதிரடியாக நிறுத்தப்பட்ட டாப் சீரியல்கள் எவை என்பது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிறது.

இதில் சன் டிவியில் 2021 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 700 எபிசோடுகளை கடந்த ‘தாலாட்டு’ என்ற குடும்ப செண்டிமெண்ட் நாடகம் ஜூன் மாதத்தில் நிறைவடைந்தது. இது சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. இதன் தொடர்ச்சியாக ஜீ தமிழில் ஒளிவிடும் சுடர் போல் 2021 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ‘ரஜினி’ சீரியலும் அதே ஏப்ரலில் தான் நிறைவடைந்தது.

மேலும் காதலுக்கு நிறம் எல்லாம் கிடையாது என்பதை நிரூபித்த பாரதிகண்ணம்மா சீரியலும் 1100 எபிசோடுகளை கடந்து கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. அதன் தொடர்ச்சியாக பாரதி கண்ணம்மா சீரியலின் 2ம் சீசனும் துவங்கியது. ஆனால் வந்த வேகத்திலேயே வெறும் 133 எபிசோடுகளுடன் சமையலம்மாவிற்கு எண்டு கார்ட் போட்டு விட்டனர்.

Also read: 2023ல் டிஆர்பி-யை கலக்கிய டாப் 6 சீரியல்.. மற்ற சேனல்களை வருஷம் முழுக்க திணறடித்த பிரபல சேனல்

2023ல் நிறைவடைந்த டாப் சீரியல்கள்

இதில் கண்ணம்மாவாக நடித்த வினுஷா மற்றும் ரோஷினி ஹரிப்ரியன் இருவரும் இந்த சீரியலின் மூலம் செம பேமஸானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து விஜய் டிவியின் ‘காற்றுக்கென்ன வேலி’ என்று ரொமான்டிக் சீரியலும் 800 எபிசோடுகளை கடந்து கடந்த செப்டம்பர் மாதத்தில் நிறைவடைந்தது.

அதேபோல் அண்ணன் தம்பிகளின் பாசப் போராட்டத்தை அழகாக காண்பித்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பானது. ஆனால் 1300 எபிசோடுகளை கடந்த இந்த சீரியலை அதிரடியாக கடந்த அக்டோபர் மாதத்தில் முடித்து வைத்து விட்டனர். அதன் தொடர்ச்சியாக இதன் 2வது சீசன் இப்போது ஒளிபரப்பாகிறது.

மேலும் அபி- வெற்றி என்ற காதல் தம்பதியர்களின் கதையை சொன்ன ‘தென்றல் வந்து என்னை தொடும்’ என்ற சீரியலின் இரண்டாம் சீசன் 600 எபிசோடுகளை கடந்து நவம்பர் மாதத்தில் நிறைவடைந்தது. மேலும் 2 காதல் தம்பதியர்களின் கதையை சொன்ன ஈரமான ரோஜாவே என்ற சீரியலின் முதல் சீசனைத் தொடர்ந்து 2வது சீசனில் 500 எபிசோடுகளுடன் நேற்று தான் நிறைவடைந்தது.

இந்த 7 சீரியல்கள் தான் சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியடைய வைக்கும் அளவுக்கு திடீரென்று நிறுத்தப்பட்ட சீரியல்கள். இருப்பினும் இந்த சீரியல்களுக்கு நிகராக புத்தம் புது சீரியல்களையும் அடுத்தடுத்து பிரபல சேனல்கள் துவங்கி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கின்றனர்.

Also read: சத்தியத்தை மறந்து கல்யாணம் பண்ணிய செந்தில் மீனா.. பாண்டியன் எடுக்கப் போகும் முடிவு இதுதான்

- Advertisement -

Trending News