சத்தியத்தை மறந்து கல்யாணம் பண்ணிய செந்தில் மீனா.. பாண்டியன் எடுக்கப் போகும் முடிவு இதுதான்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் பாண்டியன் பாசத்தை காட்டி செண்டிமெண்டாக மகன்களை லாக் பண்ணி வைத்திருந்தார். அதுவும் பசங்களின் சந்தோஷத்தை கொஞ்சம் கூட யோசிக்காமல் தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால் என்பதற்கு ஏற்ப ஹிட்லர் மாதிரி நடந்து கொள்கிறார். அதனாலயே பாண்டியனின் பிள்ளைகளும் அப்பாவிடம் பல விஷயங்களை மறைத்து சந்தோஷத்தை குழி தோண்டி புதைத்து விட்டார்கள்.

இதில் கடைசி மகன் கதிர் மட்டும் அப்பாவிடம் பாசமாக இருந்தாலும் நியாயமாக தனக்கு கிடைக்க வேண்டிய சந்தோஷத்தை செய்யும் விதமாக துணிச்சலுடன் இருக்கக்கூடியவர். அதனால் தான் அண்ணனின் வாழ்க்கை இருண்டு போய் விடக்கூடாது என்பதற்காக செந்தில் மீனா காதலுக்கு சப்போர்ட் செய்து வருகிறார். அதே மாதிரி இவர்களுடைய காதல் வீட்டிற்கு தெரிந்ததால் பிரச்சனை வேற மாதிரி மாறிவிடும் என்பதற்கு உடனடியாக முடிவு எடுத்து விட்டார்.

தன் அண்ணன் ஆசைப்பட்ட மாதிரி மீனாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக கோவிலில் கல்யாணத்தை யாருக்கும் தெரியாமல் ஏற்பாடு பண்ணி இருந்தார். அதற்கு ஏற்ற மாதிரி செந்தில் மீனா திருமணம் நல்லபடியாக முடிந்து விட்டது. முடிந்த கையோடு ரிஜிஸ்டர் ஆபீசில் போயி பதிவு பண்ணி விட்டார்கள். அந்த வகையில் இவருடைய திருமணத்தை யார் நினைத்தாலும் அதை கேன்சல் பண்ண முடியாத அளவிற்கு உறுதிப்படுத்தி விட்டார்கள்.

Also read: புருசன் பொண்டாட்டிக்குள் பிரச்சனையை உருவாக்கும் குணசேகரன்.. பலியாடாக சிக்கப் போகும் ஜனனி

மேலும் திருமணம் முடிந்த கையோடு செந்தில் மீனாவை, கதிர் அவருடைய அப்பா வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். ஏற்கனவே பங்காளிகள், பாண்டியனை எப்பொழுது வம்புக்கு இழுக்கலாம் சண்டை போடலாம் என்று காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஒரு விஷயம் லட்டு மாதிரி அமைந்துவிட்டது. செந்தில் மீனா கல்யாண கோலத்தில் இருப்பதை பார்த்து அவர்களும் அதிர்ச்சியாகி விட்டார்கள்.

அதே மாதிரி பையன் இந்த மாதிரி ஒரு விஷயத்தை செய்ய மாட்டான். நமக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கிறார் என்ற நம்பிக்கையில் பாண்டியன் இருந்தார். அந்த வகையில் சத்தியம் எல்லாம் சக்கரை பொங்கல் மாதிரி எங்களுக்கு என்று நினைத்து திருமணத்தை செய்து விட்டு வீட்டிற்கு வந்து விட்டார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பாண்டியனுக்கு ரொம்பவே அதிர்ச்சியாக இருக்கிறது.

சும்மாவே பாண்டியன் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார். இப்பொழுது மகன் இந்த மாதிரி பண்ணிட்டார் என்று தெரிந்ததும் சும்மாவா இருக்க போறாரு. காலில் சலங்கை கட்டி விட்ட மாதிரி ருத்ர தாண்டவம் ஆடப்போகிறார். இருந்தாலும் வேறு வழி இல்லாமல் செந்தில் மீனா வீட்டுக்குள் போய் விடுவார்கள். இனிமேல் தான் மீனா அங்க போய் ஆடுற ஆட்டமே பாண்டியனுக்கு எதிராக இருக்கப்போகிறது.

Also read: அர்த்த ராத்திரில கதவை தட்டுவாங்க.. பார்க்கக் கூடாததை எல்லாம் பார்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை