வெயிட் போட்டதால் காணாமல் போன 5 நடிகைகள்.. சிம்பு, சிவகார்த்திகேயனின் ஜோடிக்கு வந்த நிலைமை

5 actresses who disappeared due to obesity: திரைத் துறையில் நடிகர்கள் தங்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ப உடல் பருமனை மற்றும் தோற்றத்தை அடிக்கடி மாற்றி வெற்றி பெற்று வருகின்றனர்.  

ஆனால் நடிகைகள் தங்களது உடல் பருமன் சற்று அதிகரித்துவிட்டாலும், மார்க்கெட்டை இழந்து அல்லாடி விடும் நிலைமை ஏற்படுகிறது. அவ்வாறு உடல் பருமனால் மார்க்கெட்டை இழந்த நடிகைகளில் சிலர்,

சோனாக்ஷி சின்கா: லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் தான் சோனாக்ஷி சின்கா, இந்தி திரை உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த சோனாக்ஷி சின்கா, தனது அதிக உடல் பருமனாலும், தொடர் தோல்விகளாலும் பல பட வாய்ப்புகளை  இழந்து வருகிறார்.

அனுஷ்கா: பாகுபலியின் மூலம் இந்திய திரை உலகில் அதிக ரசிகர்களை கொண்டிருந்த அனுஷ்கா, கருத்து சொல்லப் போகிறேன் என்று, தனது மார்க்கெட்டை பற்றி கவலைப்படாமல் “இஞ்சி இடுப்பழகி” படத்திற்காக தனது உடல் எடையை கூட்டினார்.

அதன் பின் உடல் எடையை குறைக்க முடியாமல் அவஸ்தை பட்டதோடு மட்டுமல்லாமல், பட வாய்ப்புகள் இல்லாமல் நொந்து நூடுல்ஸ் ஆனார்.

பாடிஷேமிங்கிற்க்கு ஆளான மஞ்சிமா மோகன் 

மஞ்சிமா மோகன்: அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்த மஞ்சுமா மோகன், கௌதம் கார்த்திக்கின் தேவராட்டம் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். 

கௌதம்கார்த்திக் உடனான திருமணத்தின் போது அதிக உடல் எடையுடன் காணப்பட்ட மஞ்சிமா மோகனை கண்டு அவரது ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர்.

அது மட்டும் இன்றி பலரது பாடிஷேமிங்கிற்க்கும் ஆளான மஞ்சிமா மோகன் தற்போது உடல் எடையை குறைப்பது குறித்த பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ராஷி கண்ணா: தமிழில் இமைக்கா நொடிகள் மூலம் அறிமுகமான ராஷிகண்ணா, பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து அடங்க மறு, சர்தார் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

திடீரென தனது உடல் எடை அதிகரிப்பால் பட வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்படவே, பின்னர் வெறித்தனமான உடற்பயிற்சியால் உடல் எடையை குறைத்து அரண்மனை 4 படத்தில் ஸ்லிம்மாக தோன்றியுள்ளார்.

கல்யாணி பிரியதர்ஷன்:  சிம்புவுடன் மாநாடு, சிவகார்த்திகேயனுடன் ஹீரோ போன்ற படங்களில் நடித்தவர் கல்யாணி பிரியதர்ஷன். 

க்யூட்டான நடிகையாக வலம் வந்த கல்யாணி பிரியதர்ஷன்  தனது உடல் எடை அதிகரிப்பால் பல படவாய்ப்புகளை இழந்து உள்ளார்.

சமீபத்தில் தனது 30 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய இவர் தற்போது ஜெயம் ரவி ஜோடியாக ஜீனி என்கின்ற படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -