சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

2023ல் டிஆர்பி-யை கலக்கிய டாப் 6 சீரியல்.. மற்ற சேனல்களை வருஷம் முழுக்க திணறடித்த பிரபல சேனல்

2023 Top Serial in TRP Ratings: அடுத்த மாதம் புத்தாண்டு துவங்க இருப்பதால் 2023ல் டிஆர்பி-யில் முன்னிலை வகித்த சீரியல்கள் எவை என்பது சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதில் சன் டிவி தான் மற்ற சேனல்களை எல்லாம் வருஷம் முழுக்க பீதியிலேயே வைத்திருந்தது.

இதில் டாப் 6 இடத்தைப் பிடித்த சீரியல்கள் எல்லாம் பெரும்பாலும் சன் டிவியின் சீரியலாகவே தான் இருந்தது. முன்பு விஜய் டிவியின் சீரியல்தான் டாப் இடத்தில் இருக்கும். ஆனால் இந்த வருடம் முழுவதும் விஜய் டிவி சீரியல்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

இருப்பினும் சன் டிவியுடன் மல்லுக்கட்டி போராடிய விஜய் டிவி, இந்த வருடத்தில் மட்டும் சிறகடிக்க ஆசை, மகாநதி, பொன்னி, ஆஹா கல்யாணம்,  நீ நான் காதல், சக்திவேல் போன்ற விறுவிறுப்பான கதை களத்தை கொண்ட சீரியல்களை தரை இறக்கியது. இவையெல்லாம் இப்போது டிஆர்பி-யில் முன்னிலை வகித்து வருகிறது.

Also read: புகுந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்த ஸ்ருதி.. முதல் நாளே மாமியாரை அலற விட்ட மருமகள்

2023ல் டிஆர்பி-யை கலக்கிய சீரியல்கள்

2023ல் சன் டிவியின் சீரியல்கள் தான் டாப் 6 இடத்தில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தது. அதிலும் இந்த வருடத்தில் துவங்கப்பட்ட சன் டிவியின் புத்தம் புது சீரியலான சிங்கப்பெண்ணே சீரியல் தான் எல்லா சீரியல்களையும் ஓரம் கட்டி விட்டு முதல் இடத்தில் இருக்கிறது.

இதைத் தொடர்ந்து 2-வது இடம் பெரும்பாலும் கயல் சீரியல்தான் பிடித்தது. 3-வது இடத்தில் வானத்தைப்போல சீரியலும், 4-வது இடத்தில் எதிர்நீச்சல் சீரியலும் இருக்கிறது. 5-வது இடத்தில் சுந்தரி சீரியலும், 6-வது இடத்தில் இனியா சீரியலும் உள்ளது.

ஆக மொத்தத்தில் இந்த வருட டிஆர்பி-யில் டாப் 6 சீரியல்கள் சன் டிவியின் சீரியல்களாகத்தான் இருந்தது. அடுத்த வருடமான 2024ல் ஆவது சன் டிவியை பின்னுக்கு தள்ளி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்துமா என்பதை பார்ப்போம்.

Also read: பாக்யாவை டம்மியாக்கி ஓரம் கட்டி வரும் ராதிகா.. அசிங்கப்பட்டு நிற்கும் பூமர் அங்கிள் கோபி

- Advertisement -

Trending News