பிக்பாஸில் என்ட்ரி கொடுக்கப் போகும் முதல் 8 பேர்.. களைகட்டிய சீசன்6

சின்னத்திரை ரசிகர்களுக்கு இஷ்டமான என்டர்டைன்மென்ட் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் இன்று துவங்கப் போவதால், அதில் யார் யார் கலந்து கொள்கின்றனர் என்பதை ரசிகர்கள் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கின்றனர். இதில் முதல் நாளான இன்று கமலஹாசன் அறிமுகம் செய்யும் 8 போட்டியாளர்களின் லிஸ்ட் இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது.

ஜிபி முத்து: டிக்டாக் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் ஜிபி முத்து. சினிமாவிலும் ஒருசில படங்களில் நடித்து வரும் இவர், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள இருக்கிறார்.

ராபர்ட் மாஸ்டர்: டான்ஸ் மாஸ்டராக சினிமாவில் பணியாற்றியவர் ராபர்ட் மாஸ்டர். விஜய், சிம்பு உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் பணிபுரிந்த இவர், நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளார்.

Also Read: இரு காதலிகளுடன் அசத்தல் என்ட்ரி கொடுத்த பிரபலம்.. களைகட்டும் பிக்பாஸ் கிராண்ட் ஓப்பனிங்

அசல் கொலார்: ஏராளமான சுயாதீன இசைப் பாடல்களை பாடி ஃபேமஸ் ஆன சுயாதீன இசைக்கலைஞரான அசல் கொலாரும் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ள உள்ளார். இவர் யூடியூபில் வைரல் ஹிட் அடித்த ஜோர்தால என்கிற பாடலை பாடியவர்.

ஏடிகே: ராப் பாடகரான ஏடிகேவும் பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக பங்கேற்க உள்ளார். இவர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான கடல் படத்தில் இடம்பெறும் மகுடி என்கிற பாடலையும், அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம்பெறும் சோக்காலி என்கிற பாடலையும் பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிவின் கணேசன்: கடந்த சீசன் முதல் திருநங்கைகளும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொண்டதால், கடந்த முறை நமீதா மாரிமுத்து கலந்துகொண்ட நிலையில், இம்முறை ஷிவின் கணேசன் என்கிற திருநங்கை ஒருவர் போட்டியாளராக என்ட்ரி கொடுக்க உள்ளார்.

Also Read: பிக் பாஸ் சீசன்-6 களமிறங்கும் 20 போட்டியாளர்களின் மொத்த லிஸ்ட.. வேட்டையாட காத்திருக்கும் ஆண்டவர்

ஷெரினா: ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் மாடல் அழகி கலந்து கொள்வது வழக்கம் தான் அந்த வகையில் இந்த சீசனில் மாடல் அழகி ஷெரினா ஒரு போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து சீரியல் நடிகர் அஸீம், ராம் ராமசாமி உள்ளிட்ட 8 பேர் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று உலகநாயகன் கமலஹாசன் அறிமுகம் செய்து பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்ப போகிறார்.

Also Read: பிக்பாஸ் வீட்டுக்குள் களமிறங்கும் விவாகரத்து நடிகர்.. அப்ப ஒரு லவ் ஸ்டோரி கன்ஃபார்ம்

இவர்களைத் தொடர்ந்து அடுத்த வாரம் மீதி இருக்கும் 12 பேர் என்ட்ரி கொடுப்பார்கள். எனவே இன்று மாலை 6 மணிக்கு துவங்கியிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்க சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.