வருஷ துவக்கத்திலேயே டிஆர்பி-ஐ அடித்து நொறுக்கிய டாப் 6 சீரியல்கள்.. பயங்கர டஃப் கொடுக்கும் சில்வண்டு

Top 6 serial in this week’s TRP Rating List: ஒவ்வொரு வாரமும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் வெளியாகி இணையத்தை பரபரப்பாக்கும், அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் புத்தம் புது சீரியல்தான் மற்ற சீரியல்களுக்கு எல்லாம் தண்ணீர் காட்டி இருக்கிறது.

இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் 10-வது இடத்தில் விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் சீரியலும், 9-வது இடத்தில் சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியலும் உள்ளது. 8-வது இடத்தில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக 6-வது இடம் தான் இனியா சீரியலுக்கு கிடைத்திருக்கிறது.

இனியா எப்போதுமே டாப் 5 லிஸ்டில் இருக்கும். ஆனால் கடந்த சில வாரங்களாகவே இந்த சீரியல் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் 6-வது இடம் அதிரடியான திருப்பங்களை அரங்கேற்றும் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு கிடைத்துள்ளது. 5-வது இடத்தில் எதிர்நீச்சல் சீரியல் உள்ளது.

Also Read: ரெண்டு பிள்ளைகளுடன் கூத்தடிக்கும் கோபி.. பாக்யாவை சமாளிக்க போகும் ராதிகா

இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 இடத்தைப் பிடித்த சீரியல்

இதே, போன வருஷம் இந்த நாளில் எதிர்நீச்சல் சீரியல்தான் டிஆர்பி-யில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் சில மாதங்களாகவே இந்த சீரியலில் எந்த பரபரப்பும் விறுவிறுப்பும் இல்லாமல் அரைத்த மாவையே அரைப்பதால், எந்த முன்னேற்றமும் இல்லாத எதிர்நீச்சல் சீரியலுக்கு இந்த வார டிஆர்பி-யில் 5-வது இடம் தான் கிடைத்தது.

அதேபோல் அண்ணன் தங்கையின் பாசப் போராட்டத்தை அழகாக காண்பிக்கும் வானத்தைப் போல சீரியலுக்கு 4-வது இடமும், கலெக்டராக மாஸ் காட்டும் சுந்தரிக்கு 3-வது இடமும் கிடைத்துள்ளது. மேலும் சன் டிவியின் கயல் சீரியல்தான் இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் 2-வது இடத்தில் உள்ளது.

முதல் இடத்தை புத்தம் புது சீரியலான சிங்கப்பெண்ணே சீரியல்தான் பிடித்துள்ளது. இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் சற்றும் எதிர்பாராத அதிரடி திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் சில்வண்டு போல் இருக்கும் ஆனந்தி, சிங்கம் போல் கர்ஜிப்பதை பார்க்க சின்னத்திரை ரசிகர்கள் தவறுவதில்லை.

Also Read: ரோகிணியின் முகத்திரையை கிழிக்க போகும் மருமகள்.. புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து படும் அவமானம்

- Advertisement -spot_img

Trending News