2023 இல் உலகளவில் கொண்டாடப்பட்ட முதல் 10 பிரபலங்கள்.. தளபதிக்கு கிடைத்த அங்கீகாரம்

Vijay : ஒவ்வொரு வருடமும் உலக அளவில் சினிமா, தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் சாதனை படைத்த நபர்களை பட்டியலிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு 50 ஆசிய பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் பெயரும் இடம் பெற்று இருக்கிறது.

அந்தப் பட்டியலில் முதலாவதாக பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானின் பெயர் இடம் பெற்றுள்ளது. ஏனென்றால் கடந்த வருடம் இவருடைய பதான், ஜவான் மற்றும் டன்கி படங்கள் தொடர்ந்து ஹட்ரிக் வெற்றி பெற்றது. மேலும் இரண்டாவது இடத்தை பாலிவுட் நடிகை ஆலியா பட் பிடித்து இருக்கிறார்.

பிரியங்கா சோப்ராவுக்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்கிறது. கடந்த வருடம் அவரது நடிப்பில் வெளியான சிட்டாடல் வெப் தொடர் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது. நான்காவது இடத்தில் நடிகர் மற்றும் பாடகருமான பஞ்சாபி தில்ஜித் டோசன்ஜ் உள்ளார். ஐந்தாவது இடத்தில் இலங்கையைச் சேர்ந்த பாடகர் சார்லி எக்ஸ்சிஎக்ஸ் இருக்கிறார்.

Also Read : GOAT படத்தில் விஜய் கொடுத்த வாய்ப்பு.. செகண்ட் இன்னிங்ஸில் கலைகட்ட போகும் ஸ்டார்

இந்த வருடம் அனிமல் படத்தின் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ரன்பீர் கபூர் ஆறாவது இடத்தில் உள்ளார். இனிமையான குரலுக்கு சொந்தக்காரரான ஸ்ரேயா கோஷல் ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறார். எட்டாவது இடம் தான் தளபதி விஜய் பிடித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு விஜய்யின் வாரிசு மற்றும் லியோ படம் வெளியாகி வசூலை வாரி குவித்தது. முதல் 10 இடத்தில் விஜய் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பதாவது இடத்தில் நடிகர் வஹாஜ் ஹனிஃப் பிடித்துள்ளார். பத்தாவது இடத்தில் கன்னட நடிகை இமான் வெல்லானி உள்ளார்.

Also Read : பத்திரத்தோடு விஜய் போட்ட கட்டளை.! ஜெயலலிதா பாணியில் சட்ட விரோதமாய் செய்த வேலை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்